செய்திகள் :

தவெக: ``திமுக தோல்விக்கு காரணம் இருவர் மட்டுமே! அதிமுகவின் பதவி வெறி.!" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தவெக வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பொதுக்கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினார்.

அதில் உரையாற்றிய அவர், ``தி.மு.க தற்போது சந்தித்துள்ள அரசியல் சரிவு மற்றும் தேர்தல் தோல்விக்கு இரண்டே நபர்கள்தான் காரணம். ஒருவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மற்றொருவர் உதயநிதி ஸ்டாலின். கலைஞர் கருணாநிதி ரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்த்த ஒரு மாபெரும் இயக்கத்தை, அவரது வாரிசுகள் அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

உதயநிதி, ஸ்டாலின்

தமிழக வெற்றிக் கழகம் "குதிரைபேர அரசியல்" செய்வதாக உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், உண்மையில், நிஜமான குதிரைபேரத்தை நடத்தியது தி.மு.க-தான். தவெக தலைவர் விஜய் முதல்வராவதைத் தடுப்பதற்காக, தி.மு.க தனது பரம எதிரியான அ.தி.மு.க-வுடன் கைகோர்க்கத் துணிந்தது.

உதயநிதி ஸ்டாலினும், எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனும், பாஷ்யம் குழுமத்தின் தொழிலதிபர் முன்னிலையில் ரகசியச் சந்திப்பு நடந்தது. தவெக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, அ.தி.மு.க-விற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வர் ஆக்க தி.மு.க தரப்பு முயன்றது.

இந்தத் திட்டத்தில் முதல்வரின் மருமகன் சபரீசனுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இந்த "துரோக அரசியலுக்கு" இடதுசாரி கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஏ. பேபி போன்றவர்கள், தி.மு.க - அ.தி.மு.க இணைந்து பா.ஜ.கவின் நிழலில் ஆட்சி அமைக்கும் முயற்சியை வன்மையாக எதிர்த்ததாலேயே இந்தத் திட்டம் தோல்வியடைந்தது.

தமிழக அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி த.வெ.க தலைவர் விஜய்-க்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி
அதிமுக எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் இருந்து வந்த அந்த ஒற்றைக் குரல், தமிழ்நாடு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின்னரே காங்கிரஸ் கட்சியின் மாநில நிலைப்பாட்டில் தெளிவு பிறந்தது.

சி.வி. சண்முகம் போன்ற அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் ஏன் அதிருப்தி அடைந்தார்கள் என்பதற்கும் இதுவே காரணம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் தி.மு.க-வை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சி, இன்று பதவி வெறிக்காக அதே தி.மு.க-வுடன் கைகோர்க்க முயன்றது அக்கட்சியின் கொள்கைக்கே எதிரானது." எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

புதுக்கோட்டை : 'இந்த டாஸ்மாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி.!' - மக்கள் நிம்மதிப் பெருமூச்சு!

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மி... மேலும் பார்க்க

அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' - எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர்.இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்ற... மேலும் பார்க்க

பெட்ரோல் விலை உயர்வு: ``தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" - சு.வெங்கடேசன் கண்டனம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்ற... மேலும் பார்க்க

`மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்' - விஜய்க்கு விசிக எம்.பி கோரிக்கை!

எடப்பாடி தலைமையில் ஒரு அணி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான ஒரு அணி என அதிமுக மீண்டும் பிளவுபட்டு இருக்கிறது. இதில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வா... மேலும் பார்க்க

'திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்!' - தீர்மானம் நிறைவேற்றிய திருச்சி திமுக

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, புதிதாக த.வெ.க ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், தி.மு.க தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையி... மேலும் பார்க்க

தம்பிக்கு 'செக்', அண்ணனுக்கு 'லக்' - ஜெயலலிதா கட்டம் கட்டியவரை அழைத்து வந்த எடப்பாடி! - அதகள அதிமுக!

த.வெ.க-வுக்கு வலிய முட்டுக் கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற... மேலும் பார்க்க