குழந்தை பெற கைதிக்கு பரோல் கேட்ட மனைவி: `குழந்தை களங்கத்தை சுமக்க நேரிடும்'- நீத...
வடபாதி பூமாத்தம்மன் ஆலயத்தில் மஹா பிரத்தியங்கிரா ஹோமம்... தடைகள் விலக நீங்களும் சங்கல்பிக்கலாம்!
வாழ்வில் பிரச்னைகள் தீர, வேண்டும் வரம் கிடைக்க, ஆனந்த வாழ்வு மலர இறைவழிபாடு அவசியம். அப்படி இறைவனை வழிபடும் முறைகளில் முக்கியமான ஒன்று ஹோமங்கள். தனிப்பட்ட நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் செய்யப்படும் ஹோமங்கள் கைமேல் பலன் கொடுப்பவை. தேவர்களும் ரிஷிகளும் அசுரர்களும் ஹோமங்களும் பிரம்மாண்ட யாகங்களும் செய்து ஒரு குறிப்பிட்ட தேவதையை வழிபட்டு விரும்பும் சக்தியைப் பெற்றனர் எனப் புராணங்கள் தோறும் உதாரணங்கள் உள்ளன.
இன்றும் சத்ரு சம்ஹார ஹோமம், காரிய ஸித்தி ஹோமம் என முக்கியப் பிரமுகர்கள் பலரும் தமக்கு நன்மைகள் நடக்க யாகங்கள், ஹோமங்கள் செய்வது குறித்த செய்திகளை நாம் பார்த்துவருகிறோம்.
வீட்டில் அடிக்கடி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஸ்ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்களைச் செய்வதை இன்றும் பலர் வழக்கமாக வைத்துள்ளனர். அப்படிச் செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. அதேவேளையில் உக்கிரமான தெய்வங்களுக்கான சில ஹோமங்கள் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் செய்யப்பட வேண்டும் என்று உள்ளன. அதற்குக் காரணம் அது குறித்த ஏற்பாடுகளில் இருக்கும் சிரமங்களும் பொருட் செலவுகளும் தான். அப்படி ஒரு ஹோமம்தான் பிரத்யங்கிரா ஹோமம்.

நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவனார் சரபராக அவதரித்தபோது, அவருடைய இரு இறக்கைகளாக பிரத்தியங்கிராதேவியும், சூலினி துர்கையும் அவதரித்ததாகக் கூறுவர். பைரவ மூர்த்தியின் பக்தர்கள், இவளை பைரவ பத்தினியாகப் போற்றுவர். சகலமும் அருளும் இந்த தேவியின் சொரூபத்தை மிக அருமையாக விவரிக்கின்றன ஞான நூல்கள். ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள் இந்த அன்னை.
ஒவ்வொன்றிலும் முக்கண்கள் கொண்ட ஆயிரம் சிம்ம முகங்கள், விரிந்த கூந்தல், ஆயிரம் திருக்கரங்களுடன் ராஜசிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள். சூலம், முண்டம், சர்ப்பம், பாசம், டமருகம் முதலானவற்றை திருக்கரங்களில் கொண்டு காட்சியளிப்பாள் என்கின்றன புராணங்கள். வேறுசில நூல்கள், பதினாறு கரங்கள் கொண்டவளாகவும் இந்த அன்னையைச் சித்திரிக்கின்றன.
மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
பில்லிசூன்யம் போன்ற தீவினைகளைப் பொசுக்கும் மாதாவான இந்த தேவியை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் அமாவாசை தினங்களில், எள்ளு புஷ்பம் கொண்டு அர்ச்சித்து, உரிய மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபட்டால், சகல தீவினைகளும் நீங்கும். சத்ரு பயம், மனக்கலக்கங்கள் அகலும். எடுத்த நற்காரியங்களில் தடைகள் யாவும் நீங்கி வெற்றி சர்வநிச்சயம் ஆகும். ஆங்கிரஸர், பிரத்யங்கிரஸ் ஆகிய ரிஷிகள் இந்த அம்பிகைக்கு உரிய மந்திரத்தைக் கண்டறிந்து விளக்கியிருக்கிறார்கள். அதற்கு உண்டான மூல மந்திரத்தை குரு மூலமாக உபதேசம் பெற்று ஜபித்து வழிபடுவது சிறப்பு.
இப்படிப்பட்ட அன்னைக்கு அமாவாசையில் ஹோமம் செய்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான ஒன்று. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகும். நன்மைகள் கூடிவரும். நீண்டகாலமாக இழுபறியில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும் என்பது நம்பிக்கை. இதில் கலந்துகொள்வதன் மூலம் முன் ஜன்ம வினைகள் குறைவதால் வாழ்வில் நிகழும் துன்பங்கள் குறைந்து சந்தோஷ வாழ்க்கை ஸித்திக்கும். திருமணமாகிக் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பிக்க விரைவில் புத்திய சந்தானம் கிடைக்கும் என்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஹோமத்தை சக்தி விகடனும் மாமண்டூர் வடபாதி அருள்மிகு பூமாத்தம்மன் ஆலய நிர்வாகமும் இணைந்து நடத்த இருக்கிறோம். சாந்த சொரூபிணியாக அம்பிகை பூமாத்தம்மன்னாக குடிகொண்ட தலம். வடபாதி ஆதீனம் - பாலயோகி சித்தர் சக்திமுத்துக்குமார சுவாமிகளின் நிர்வாகத்தில் தற்போது சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுவரும் இந்தத் தலத்தில்தான் பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெற இருக்கிறது.
வரும் வைகாசி மாதம் அமாவாசை தினத்தில் - 16.5.26 அன்று இரவு 7:30 முதல் 9:30 வரை நடைபெறும் யாகத்தில் நம் வாசகர்களும் சங்கல்பப் பிரார்த்தனை செய்து வழிபடலாம். மிக அற்புதமான புண்ணிய க்ஷேத்திரத்தில் நிகழவுள்ள சக்தி வாய்ந்த இந்த யாகத்தில் நீங்களும் சங்கல்பப் பிரார்த்தனை செய்து கலந்து கொள்ளலாம். மகா சக்தியாய் அருள்பாலிக்கும் அருள்மிகு பூமாத்தம்மனையும், அன்னை பிரத்தியங்கிராதேவியையும் மனதார வணங்கி அருள்பெற்றுச் சிறக்கலாம்.
மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு!
இந்த ஹோம வைபவத்துக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசேஷ ஹோமங்கள்-வழிபாட்டு சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், முறைப்படி ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (விபூதி + குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்; வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!
மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.



















