பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வா...
'காரைக்குடியில் 4 நாள்கள்...' - சீமானின் இறுதிக் கட்ட பிரசார வியூகமென்ன?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இறுதிக்கட்ட பரப்புரை பயணத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் காரைக்குடியில் அவர் கூடுதல் நாள்கள் செலவிட இருப்பதாகவும் சொல்கிறார்கள் அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள்.

நம்மிடம் பேசியவர்கள், "கடந்த மார்ச் 23-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் பிரசாரத்தை தொடங்கினார் அண்ணன் சீமான், தற்போதுவரை டெல்டா மண்டலம் நீங்களாக மற்ற மண்டல பிரசாரங்களை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டார். அவரது பரப்புரை பயணத்தில் தென்மாவட்டங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இதுவரை கூடாத கூட்டத்தை பார்த்தோம். மற்ற மண்டலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இச்சூழலில் இறுதிகட்ட பரப்புரை பயணம் காரைக்குடியை மையப்படுத்தி அமையவுள்ளது" என்றனர்.
தொடர்ந்து பேசியவர்கள் "நான்குமுனைப் போட்டியால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆகையால் வாக்கு சதவிகிதத்தில் கவனம் செலுத்துவதைவிட அண்ணனை சட்டமன்றத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். ஆகையால் தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு 4 நாள்களுக்கு முன்பே அண்ணன் சீமானை காரைக்குடிக்கு வரவழைத்து தொடர் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடுகிறோம். அதுபோக, தமிழ்நாட்டில் முன்னணி நிர்வாகிகள் பலநூறு பேரை தொகுதிக்குள் இறக்கி வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தவுள்ளோம். இதுநாள்வரை நாம் தமிழர் அரசு எப்படியிருக்கும் எனப் பேசிய சீமான், அந்த 4 நாள்களில் தி.மு.க தொடங்கி த.வெ.க வரை அனைவரையும் போட்டுத் தாக்குவார். அவரின் இறுதிக்கட்ட பரப்புரை மாநிலம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும்படி அமையவுள்ளது" என்றனர்.
காரைக்குடி கள நிலவரம் குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், "காரைக்குடியில் யார் வெல்வார்கள் என்பது கணிக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது. ஆகவே எனவே எஞ்சி இருக்கும் நாள்களின் பிரசாரம் அனைவருக்குமே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது" என்றனர்













