செய்திகள் :

குவைத்: அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல்; முதுகுளத்தூர் வாலிபர் பலி

post image

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது அணிக்குருந்தன் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்தான செல்வம் (37).

இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்தான செல்வம் கடந்த 12 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள தனியார் நிறுவனமான அல் அதோ என்ற இஞ்சினியரிங் கம்பெனியில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

ஈரான் தாக்குதல்
ஈரான் தாக்குதல்

இந்நிலையில் மேற்கு ஆசியாவில் உள்ள ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் நாடும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நேற்று முன் தினம் இரவு குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ராணுவ தளத்தின் அருகே உள்ள அல் அதோ என்ற தனியார் நிறுவனமும் பாதிப்படைந்தது.

இந்தத் தாக்குதலில் அங்கு பணியாற்றி வந்த சந்தான செல்வம் குண்டு காயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மூலம் கெளசல்யாவிற்குத் தெரிய வந்தது. ஆனால் தனது கணவரின் நிலையை அறிந்து கொள்ள மீண்டும் அவர்களை கெளசல்யா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவரது அழைப்பை ஏற்கவில்லை.

சந்தான செல்வம்
சந்தான செல்வம்

இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தான செல்வம் உயிரிழந்த தகவலை அணிக்குருந்தன் கிராம நிரிவாக அதிகாரிக்குத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரி, சந்தான செல்வம் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

தகவலை அறிந்த சந்தான செல்வம் குடும்பத்தினர் மற்றும் அணிக்குருந்தன் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ஈரான் தாக்குதலில் பலியான சந்தான செல்வத்தின் உடலை தங்கள் கிராமத்திற்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: மனைவியின் கழுத்தில் கத்திரிக்கோல்; போதை கணவரிடம் போலீஸ் விசாரணை!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சுகன்யா (31). கார்த்திக் வீட்டில் நேற்றிரவு பயங்கர சத்தம் கேட்டது. அதனால் அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் என்னவென்று வ... மேலும் பார்க்க

`மனைவியிடம் சொல்வேன்'- மிரட்டிய காதலி; கொன்று உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவருக்கு டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் மோனிகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் 2021ம் ஆண்டு அறிமுகமாகிக்கொண்டனர். அடிக்கடி விசாகப்பட்டினத்தின் பல பகுத... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: கொலையில் முடிந்த வாக்குவாதம்; வியாபாரியின் தலையை வெட்டி எடுத்த நபர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி அருகில் உள்ள பார்சவால் என்ற கிராமத்திற்கு பப்லு என்பவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்ய சென்றார். அங்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யக்கூடாது என்று சங்கர்(50) என்பவர் தெரிவித்தார். ஆன... மேலும் பார்க்க

தகாத ஆசைக்கு இணங்கமறுத்த பணிப்பெண்; குத்திக் கொலைசெய்துவிட்டு ஆந்திராவிற்கு ஓடிய மும்பை டிவி நடிகர்!

மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசிஷ் மேஸ்ரம். டிவி நடிகரான ஆசிஷ் வீட்டில் சுமன் காம்ப்ளே என்ற 37 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வீட்டில் வேலை செய்தபோது அடிக்கடி ஆசிஷ் பாலியல் த... மேலும் பார்க்க

எரிவாயு பற்றாக்குறை: `கேஸ் இணைப்பை துண்டிப்போம்' என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி... உஷார்!

ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர் பற்றாக... மேலும் பார்க்க

பெங்களூரு: இஸ்லாமிய மாணவனை 'தீவிரவாதி' எனத் திட்டிய பேராசிரியர்; வீடியோவால் வெளிவந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில், வகுப்பு நேரத்தில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை பேராசிரியர் ஒருவர் ‘தீவிரவாதி’ என்று திட்டி, மத ரீதியான வெறுப்புக்கருத்துக்களை உமிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ... மேலும் பார்க்க