செய்திகள் :

கோவை சிறுமி கொலை: "ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை" – தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி விமர்சனம்

post image

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதின்று மாலை சமூக விரோதிகளால் இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து, பொது மக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளானது. சமூக குற்றங்கள் நிகழ போதை பொருட்கள் கலாசாரம் அதிகரித்தது, மிக முக்கிய காரணமாக விளங்கியது.

இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது.

இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

கார்த்தி, மோகன்ராஜ்
கார்த்தி, மோகன்ராஜ்

மேலும், இதுபோன்ற சமூக குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து, அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்தி, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

தற்போது தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர், வரும் காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடைபெறமால் தடுக்க, போர் கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு விரைவில் நீதி கிடைக்கவும், அக்குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வில் இருந்து பிளவுபட்ட எஸ்.பி. வேலுமணி தலைமையிலான ஒரு பிரிவினருக்கு த.வெ.க. அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், எஸ்.பி. வேலுமணி த.வெ.க. அரசை விமர்சித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை சிறுமி கொலை: "குற்றப்பத்திரிகையை உடனடியாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்" - முதல்வர் விஜய்

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழக முத... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை: "ரீலிஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாகவும் இருக்க வேண்டும்" - இபிஎஸ் கண்டனம்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் கார்த்தி, மோகன்ராஜ் ... மேலும் பார்க்க

திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பேருந்து — பத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

திருவாரூரில் இருந்து உலகப் பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் நகரப் பேருந்தானது இன்று காலை வழக்கம்போல் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தை... மேலும் பார்க்க

தவெக-வுக்கு ஆதரவு: ``ஸ்டாலினின் இசைவோடுதான் ஆதரவு" - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார். அவரின் பேட்டிய... மேலும் பார்க்க

"கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை" - அமைச்சர் சம்பத்குமார் உறுதி

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தினரை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட... மேலும் பார்க்க

"மருத்துவத்துறையைத் தனியார்மயமாக்கும் செயல்" - தவெக அரசைச் சாடும் சீமான்; பின்னணி என்ன?

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது த... மேலும் பார்க்க