``தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும்?'' - SIR குறித்து அமைச்சர் ...
சருமம் முதல் தாடி, மீசை பராமரிப்பு வரை; டீன் ஏஜ் பாய்ஸ்க்கு பியூட்டி டிப்ஸ்!
டீன் ஏஜ் பாய்ஸுக்கான எளிய குரூமிங் டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி.
உணவு

பால் பொருள்கள், முட்டை, இறைச்சி, மீன், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலிருந்து வைட்டமின் டி கிடைக்கும். இந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சிப்ஸ், சாக்லேட் போன்ற நொறுக்குத் தீனிகள், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஃப்ரூட் சாலட், கிரீன் டீ என ஆரோக்கியம் தரும் உணவுகளைச் சாப்பிடவும்.
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். இது சருமத்தையும் புத்துணர்வாக வைத்திருக்கும்.
உடற்பயிற்சி

நடைப்பயிற்சி, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே உடலில் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பை பெறமுடியும். உங்களுக்குப் பிடித்த, ஆர்வத்தைத் தூண்டும் உடற்பயிற்சி ஆப்பை டவுன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஹேர் கேர்

வாரம் மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு முறையாவது எண்ணெய்க் குளியலாக இருந்தால் சிறப்பு. முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
எண்ணெய் வைத்ததும் நன்கு மசாஜ் செய்து, குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தலைக்குக் குளிக்கவும். தினசரி இருமுறை பெரிய பல்லுள்ள சீப்பால் தலையை அழுந்த வாரவும். இது தலைப்பகுதியில் ரத்தஓட்டம் சீராகப் பாய உதவும். இதனால் முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.
ஹேர் டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடவும். அந்த வெப்பக்காற்றால் கேசம் வறண்டு போகும்.
தலையையும் கேசத்தையும் சுத்தமாகப் பராமரித்தாலே பொடுகுத் தொல்லை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
ஸ்கின் கேர்

டீன் ஏஜ் சருமத் தொல்லைகளில் முக்கியமானது முகப்பரு. தினமும் முகத்தை தரமான ஃபேஸ்வாஷ் பயன்படுத்தி சுத்தமாகப் பராமரிப்பது அவசியம்.
எண்ணெய்ப் பசை சருமத்தினருக்குத்தான் முகப்பரு தொல்லை அதிகம். இவர்கள் அடிக்கடி வெறும் தண்ணீரில் முகத்தைக் கழுவித் துடைத்தால், சரும துவாரங்கள் அடைபடுவதைத் தவிர்க்கலாம். அந்தத் துவாரங்கள் அடைபடுவதுதான் முகப்பரு வருவதற்கான முதல் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
முகத்தில் மூக்கு மற்றும் தாடைப் பகுதியில் தங்கும் அழுக்கால் பிளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸ் தொல்லை ஏற்படும். அதனால் அப்பகுதிகளில் அழுக்குத் தங்காமல் சுத்தப்படுத்துவது அவசியம். இதற்கு எளிமையான வழி, தோசை மாவு. இதில் சிறிதளவு எடுத்து மூக்கு மற்றும் தாடையின் மீது பூசி, விரல்களால் மென்மையாக மசாஜ் செய்து கழுவினால் பலனளிக்கும்.
கண்கள் பளிச்சிட

செல்போன், லேப்டாப் என்று பார்த்துக்கொண்டே இருப்பதால், கண்கள் கட்டாயம் சோர்வடையும். பயன்படுத்திய சாதாரண டீ அல்லது கிரீன் டீ பேக்கை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போது, கண்களை மூடி படுத்தபடி அந்தக் குளிர்ந்த டீ பேக்ஸை கண்கள் மேல் வைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடுங்கள்.
அதிகமாக மெனக்கெடாமல், இதேபோல் உருளைக்கிழங்குத் துருவல், வட்ட வடிவில் நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள் போன்றவற்றையும் கண்களில் வைக்கலாம். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் கண்கள் பிரகாசிக்கும். வெள்ளரிக்காய்த் துண்டுகளை சாப்பிடவும் செய்யலாம்.
தாடி மற்றும் மீசை

அரும்பு மீசை வளரும் இந்த வயதில், தினமும் இரவு உறங்கச் செல்லும் முன், சிறிதளவு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்க் கலவையை மீசை மற்றும் தாடியில் பூசி மசாஜ் கொடுக்கவும். தினசரி 5 நிமிடங்கள் கொடுத்தால் போதுமானது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு முடிகள் இடைவெளியில்லாமல் அடர்ந்து வளரவும் உதவும்.
இதுவரை மொழுமொழுவென அமுல் பேபியாக இருந்த முகத்தில் அரும்பு மீசை, தாடி வளரும் இந்தப் பருவத்தில் வழக்கமான ஃபேஸ் வாஷ் போதுமா..? தாடி, மீசை மற்றும் கிருதா பகுதிகளில் கூடுதல் அழுக்குகள், இறந்த செல்கள் தங்கி இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதனால் குளிக்கச் செல்வதற்கு முன், குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பேபி டூத் பிரஷ்ஷை சிறிதளவு பாலில் தொட்டு தொட்டு மீசை, தாடி மற்றும் கிருதா பகுதிகளில் மிருதுவாகத் தேய்க்கவும். இதை வாரம் இருமுறை செய்தாலே போதும், முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் பூஞ்சை மற்றும் பொடுகு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
பாடி கேர்

ஒரு மடங்கு எண்ணெய்க்கு (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில்) அரை மடங்கு சர்க்கரை சேர்த்து (உங்கள் உடலுக்குத் தேவைப்படும் அளவு) நன்கு கலந்துகொள்ளவும்.
குளிக்கும் முன் உடல் முழுவதும் 10 நிமிடங்கள் பூசி மசாஜ் செய்யவும். பிறகு, பாடி வாஷ் பயன்படுத்தி குளித்துவிடுங்கள். சருமத்தின் இறந்த செல்கள் மூற்றிலுமாக நீங்கி சருமம் சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.
பொலிவான கால்களுக்கு
அரிசி மாவு அல்லது தோசை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பாதங்களின் மேற்பகுதியில் பூசி, நன்கு அழுத்தமாகத் தேய்த்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
பிறகு அப்படியே காயவிட்டு, காய்ந்த பிறகு கழுவவும். பாதங்களின் கருமை, மற்றும் படிந்துள்ள அழுக்குகள், இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி பாதங்கள் பளிச் சுத்தமாகும்.













