செய்திகள் :

சிறை:``ஒரே மாதிரியான படம்னா எனக்கே போர் அடிச்சிரும்" - நடிகர் விக்ரம் பிரபு

post image

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை'. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்' என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``என் 25-வது படம் 25-ம் தேதி வெளியாகிறது. என்னுடைய டாணாக்காரன் படக்குழுவுடன் மீண்டும் சேர்ந்து பயணித்தது பெரும் மகிழ்ச்சி.

டாணாக்காரன் படப்பிடிப்பில்

`டாணாக்காரன்' படத்தின் இயக்குநர் தமிழ் அவரின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதைதான் `சிறை'. நல்ல படம், நல்ல கதை எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். டாணாக்காரன் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனால், `சிறை' தியேட்டரில் வெளியாகிறது. இதுவே பெரிய சந்தோஷம்

`டாணக்காரன்' கதை வேறு... அதில் வரும் போலீஸ் கதாபாத்திரம் வேறு. இந்த சிறை கதாபாத்திரம் வேறு. உங்களைப்போல நானும் ஒரு ஆடியன்ஸ்தான். வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என அதற்காக உழைப்பேன். என் முதல் படத்திலிருந்தே என்னுடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கும். `இவன் வேற மாதிரி' - `அரிமா நம்பி' இரண்டும் திரில்லர்தான்.

டாணாக்காரன்

ஆனால் அடுத்தடுத்து வந்ததால ஒரே மாதிரியான படம்னு தோன்றியிருக்கலாம். இதற்கு நடுவில் ஒரு படம் நடித்தேன். அது அப்போது வெளியாகவில்லை. ஒரே மாதிரியான கதை எடுத்தால் எனக்கே போர்அடிச்சிரும். வேலூரில் அக்னி நட்சத்திரம் நேரம் `டாணாக்காரன்' படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது முதல் கடுமையான உழைப்பைப் போட்டு படம் முடித்தோம். அதை தியேட்டரில் கொண்டுவர கடுமையாக கஷ்டப்பட்டோம். ஆனால் முடியவில்லை. இப்போது அதேப் படக்குழுவின் இந்தப் படம் தியேட்டரில் வருகிறது அதுவே மகிழ்ச்சி.

Parasakthi: 'பராசக்தி' ரிலீஸ் எப்போது? - அப்டேட் தந்த இயக்குநர்

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திரு... மேலும் பார்க்க

Sreenivasan: "சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களை..." - ஶ்ரீனிவாசன் குறித்து சூர்யா

உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் நேற்று காலை காலமானார். திடீரென நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை ... மேலும் பார்க்க

"சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் " - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ்

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்திருக்கும் 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. 1960-களில் நடந்த மொழிப்போர் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்த 'பராசக்தி'... மேலும் பார்க்க

``நடிகர் ஶ்ரீனிவாசன் என் வகுப்புத் தோழர்; நல்ல மனிதர்" - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார்.கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனி... மேலும் பார்க்க

"என்னை கைது செய்ய உத்தரவா?" - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்

முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான லிங்குசாமி தனது தம்பி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2016 ஆம் ஆண்டு லிங்குசாமியும், அவரது தம்பியும் தங்களது... மேலும் பார்க்க