செய்திகள் :

சுவேந்திடம் 'மீண்டும்' தோற்ற மம்தா; இன்னும் சில அமைச்சர்களும் தோல்வி - முழு லிஸ்ட்!

post image

2011-ம் ஆண்டிலிருந்து திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்தது மேற்கு வங்கம். ஆனால், அந்தக் கோட்டையை தற்போது பாஜக கைப்பற்றியுள்ளது.

மேற்கு வங்கத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜிக்கே தோல்வியைத் தீர்ப்பாக வழங்கியுள்ளனர் மக்கள். இவர் பவானிபூரில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக களம் கண்டார். ஆனால், 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தவறவிட்டுள்ளார்.

சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியை தவறவிடுவது இது முதல்முறை அல்ல. 2021-ம் ஆண்டு நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிட்டார் மம்தா. ஆனால், அப்போது வெறும் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து வெற்றியைத் தட்டிச் சென்றார்.

சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி
சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி

2021-2026 காலகட்டத்தில் அமைச்சராக இருந்து, இப்போது இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர்களின் பட்டியல்...

அருப் ராய் - உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்

ரதின் கோஷ் - உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர்

பிப்லாப் மித்ரா - நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்

ஜாவேத் அகமது கான் - பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்

பிரஹாத் ஹக்கீம் - நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்

ஸ்நேஹாசிஸ் சக்ரவர்த்தி - போக்குவரத்து துறை அமைச்சர்

தோல்வியுற்ற அமைச்சர்களின் பட்டியல்...

ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதுபோல, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வியைத் தவறவிட்டுள்ளார்.

அடுத்து ,தோல்வியைத் தழுவிய அமைச்சர்களின் பெயர்கள், 'அமைச்சரின் பெயர் - அமைச்சகம் - போட்டியிட்ட தொகுதி - எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்' என்கிற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அரூப் பிஸ்வாஸ் - மின்சாரம் மற்றும் விளையாட்டு - டோலிகஞ்ச் - 6,013

பிரத்யா பாசு - உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் - டம் டம் - 25,273

தேர்தல்
தேர்தல்

சுஜித் போஸ் - தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் - பிதான்நகர் - 37,330

டாக்டர் சசி பாஞ்சா - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் - ஷியாம்புக்கூர் - 14,633

மனஸ் புனியா - நீர்வளம் - சபங் - 11,136

சோபந்தேப் சட்டோபாத்யாய - விவசாயம் - கர்தாஹா - 24,486

ஸ்நேஹாசிஸ் சக்ரவர்த்தி - போக்குவரத்து - ஜங்கிபாரா - 862

சித்திகுல்லா சவுத்ரி - மக்கள் கல்வி - மாண்டேஸ்வர் - 14,798

மலோய் கட்டக் - சட்டம் மற்றும் தொழிலாளர் நலன் - அசன்சோல் வடக்கு - 11,615

சந்திரமா பட்டாச்சார்யா - நிதி (தனிப்பொறுப்பு) - டம் டம் வடக்கு - 26,404

பீர்பஹா ஹன்ஸ்தா - வனத்துறை - பின்பூர் - 22,977

உஜ்ஜவல் பிஸ்வாஸ் - சிறைத்துறை நிர்வாகம் துறை அமைச்சர் - கிருஷ்ணாநகர் தெற்கு - 27,801

சுவபன் தேப்நாத் - கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் - பூர்வஸ்தலி தெற்கு - 16,662

பெச்சாரம் மன்னா - விவசாய சந்தைப்படுத்தல் துறை அமைச்சர் - சிங்கூர் - 21,438

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க