செய்திகள் :

சுவைக்கத் தூண்டும் சாட் : `ஆலூ போஹா' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

post image

ஆலூ போஹா

தேவையானவை:

கெட்டி வெள்ளை அவல் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் உரித்து, வேக வைத்து சிறிய சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - இரண்டு டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

ஆலூ போஹா

செய்முறை:

அவலை ஒரு வடி கூடையில் கொட்டி, கழுவி பத்து நிமிடங்கள் தண்ணீரை வடிய விடவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் இக்கலவையில் ஊறிய அவல், வறுத்த வேர்க்கடலை, உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறினால் ஆலூ போகா ரெடி.

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `கிரிஸ்பி கார்ன் ஃப்ரை' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

கிரிஸ்பி கார்ன் ஃப்ரைதேவையானவை: ஸ்வீட் கார்ன் – ஒரு கப் சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன் மைதா – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – பொரிப்பதற்கு காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு – தேவைக்கேற்பகிரிஸ்பி கார்ன... மேலும் பார்க்க

சுவைக்கத் தூண்டும் சாட் : `சேவ் பூரி' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

சேவ் பூரிதேவையானவை: பாப்டி எனப்படும் மைதா தட்டைகள் அல்லது சாட் தட்டை – 18 (இவை பெரிய கடைகளில் கிடைக்கும்) உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் உரித்து, வேகவைத்து சிறிய சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்) வெங்காயம் - ... மேலும் பார்க்க