Gold Rate: நேற்று ஆட்டம் காட்டியது; இன்று குறைந்தது! - இன்றைய தங்கம் விலை நிலவரம...
”தஞ்சாவூர் தொகுதியை கூட்டணிக்குக் கொடுக்கலாமா?” - பல்ஸ் பார்த்த ஸ்டாலின்; பதறிய நிர்வாகிகள்
திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு 34 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். நேற்று திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.
இதேபோல் தஞ்சாவூர் தொகுதிக்கும் நேர்காணல் நடந்தது. அப்போது தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொகுதியில் தேமுதிக-விற்கு எவ்வளவு வாக்குகள் இருக்கும், கடந்த தேர்தல்களில் எத்தனை வாக்குகள் வாங்கினர், இம்முறை அவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் கூடுதல் பலமா என்றெல்லாம் கேட்டதாகச் சொல்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து தொகுதியை கூட்டணிக்குக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். இதனால் நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் பதறியதுடன் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்படுமா எனக் கலக்கத்திலும் உள்ளனர்.
இது குறித்து உள்விபரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், ''சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேஎகம், சண்.இராமநாதன், துரை.சுதாகர், டாக்டர் அஞ்சுகம் பூபதி, எ.ஜி.அண்ணா, கரந்தை உதயநிதி, செந்தமிழ்செல்வன், எஸ்.எஸ்.கருணாவதி, து.செல்வம், மணிமாறன் உள்ளிட்ட 34 பேர் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்திருந்தனர்.
அவர்களிடத்தில் முதல்வர், தொகுதி நிலவரத்தையும், தேமுதிக பலம் குறித்தும் கேட்டார். அப்போது சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம், தேமுதிக-விற்கு 5,000 வாக்குகள் இருக்கும் எனச் சொல்ல மற்றொருவர் 10,000 வாக்குகள் இருப்பதாகச் சொன்னார். தொகுதியை கூட்டணிக்குக் கொடுக்கலாமானு கேட்டதற்கு நீலமேகம், தஞ்சாவூர் நமக்கு சாதகமான தொகுதி. அதுமட்டுமில்லை தலைவர் கருணாநிதி நின்ற தொகுதி. இங்கு நாம் பத்து முறை வெற்றி பெற்றுள்ளோம்.

இம்முறையும் தொகுதி நமக்கு சாதகமாக இருக்கிறது. தஞ்சாவூரில் திமுக நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்றாராம். கூட்டணிக் கட்சிகள் நம்முடன் இருக்கிறார்கள்.
எல்லோரும் இப்படியே சொன்னால் கூட்டணிக்கு எப்படி நாம் சீட் ஒதுக்க முடியும் என ஸ்டாலின் கேட்டதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து தலைமை அறிவிப்பவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஸ்டாலின் எல்லோரிடத்திலும் சொல்லி அனுப்பியுள்ளார் என்றனர்.





.jpeg)










