செய்திகள் :

தந்தை இறப்புக்குக் காரணமான ஏர்லைன்ஸின் விமானத்தில் பயணம்? சர்ச்சைகளுக்கு அஜித் பவார் மகன் விளக்கம்

post image

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித்பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

அந்த விமானம் வி.எஸ்.ஆர்.வென்சர் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது ஆகும். விபத்துக்கு அந்த நிறுவனம்தான் காரணம் என்று அஜித்பவார் உறவினரான எம்.எல்.ஏ.ரோஹித் பவார் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இப்போது அதே நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் அஜித்பவார் மகன் பார்த் பவார் தனது நண்பர்களுடன் பயணம் செய்துள்ளார். பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பார்த் பவார் வி.எஸ்.ஆர்.வென்சர் நிறுவனத்திற்குச் சொந்தமான தனி விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதிக்குச் சென்றுள்ளார்.

அஜித் பவார்
அஜித் பவார்

அந்த விமானத்தில் பார்த் பவாருடன் வேறு நான்கு பேரும் பயணம் செய்தனர். இது குறித்து சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விரிவாகக் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பார்த் பவார் விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சரத் பவார் இல்லத்திற்குச் செல்வதற்காக, மும்பையிலிருந்து புனேவிற்கு விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் எனது அலுவலகத்திற்கு அறிவுறுத்தியிருந்தேன்.

கடைசி நேரத்தில் விமானம் முன்பதிவு செய்யப்பட்டதால், எனது பணியாளர்கள் தவறுதலாக VSR-க்குச் சொந்தமான ஒரு விமானத்தை முன்பதிவு செய்துவிட்டனர். நான் அந்த விமானத்திற்குச் செல்லும் வரை அது VSR-க்குச் சொந்தமானது என்பது எனக்குத் தெரியாது. இது நிர்வாக தவறு,” என்று பார்த்த் எழுதியிருந்தார்.

மேலும் டிக்கெட் முன்பதிவு ஏஜென்டுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதாகவும், இதுபோன்ற கவனக்குறைவுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அதில் தெரிவித்தார்.

அந்த விமான நிறுவனத்தைப் பொறுத்தவரை தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

"நான் VSR-க்கு எதிரானவன். அந்த நிலைப்பாடு தொடரும். உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் சிலர் சர்ச்சையை உருவாக்க முயல்வது துரதிர்ஷ்டவசமானது," என்று அவர் மேலும் கூறினார்.

`அவர் சகோதரிதான் அவரின் இரண்டாவது மனைவி'- 28 வருட உறவை முறிக்க மனைவி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர், தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு கூறியிருக்கும் காரணம், அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், 19... மேலும் பார்க்க

பிரியாணி... அதிகாலையில் தர்பூசணி; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு - மும்பையில் அதிர்ச்சி!

மும்பை பைதோனி பகுதியில் வசிக்கும் அப்துல்லா தொகாடியா (40) என்பவரும் அவரின் உறவினர்களும் ஒரே வீட்டில் கூடி விருந்து சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். அதிகாலை 1 மணிக... மேலும் பார்க்க

'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' - மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்தியம் செய்த பாஜகவினர்

மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிகிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற தீவிரத்துடன் பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க ஆ... மேலும் பார்க்க

ராகுல், அகிலேஷ் கொடும்பாவி எரிப்பு; சட்டென பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ-வுக்கு நேர்ந்த விபரீதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் பா.ஜ.கவினர் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்வுக்கு ஏற... மேலும் பார்க்க

ஆம்ஆத்மியைத் தொடர்ந்து தாக்கரேயின் சேனாவிற்கு BJP குறி: டெல்லியில் உத்தவ் MP-கள் தனியாக ஆலோசனை?!

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே சிவசேனா இரண்டாக உடைந்துள்ளது. இப்போது துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ... மேலும் பார்க்க

600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமா... மேலும் பார்க்க