செய்திகள் :

முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள்; வனத்துறை தீவிர ஆய்வு; பின்னணி என்ன?

post image

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தண்ணீர் மற்றும் பசுந்தழைகளைத் தேடி யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றன. நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பும் வெகுவாகக் குறைந்து வருகிறது. வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள செயற்கை குட்டைகளில் வாகனங்கள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறிவரும் நிலையில், வனப்பகுதியில் நிலவும் அதீதமான வறட்சியின் காரணமாகவே யானைகள் இறந்து வருவதாகக் கூறுகின்றனர்.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

இது குறித்து விளக்கம் அளித்துள்ள முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், "முதுமலை, சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை நேற்று முன்தினம் ரோந்து சென்ற பணியாளர்கள் பார்த்துள்ளனர்.

அதேபோல் நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகத்திற்குட்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க பெண் யானை கடந்த 25 - ம் தேதி உயிரிழந்துள்ளது. தெப்பகாடு வனச்சரகத்திற்குட்பட்ட மாயார் நீர் அருவி பகுதியில் 4 வயது ஆண் யானை குட்டி ஒன்றும் உயிரிழந்துள்ளது.

வெயிலின் தாக்கம் காரணமாகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. சீகூர், ஆனைக்கட்டி ஆறுகள் வறண்டுள்ளன. யானைகளின் இறப்புக்கு வறட்சி காரணமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வன விலங்குகளின் தாகம் தீர்க்க மாற்று வழிமுறைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம்; படகுகளைப் பராமரிக்கும் மீனவர்கள் | Photo Album

100 ஏக்கர் பரப்பில் ஒரு தற்சார்பு பண்ணை; நெல், மீன், தென்னை, நிலக்கடலை, காய்கறிகள், நாட்டு மாடுகள்.. மேலும் பார்க்க

கோவை: தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை; கூட்டத்தோடு சேர்க்க வனத்துறை முயற்சி!

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.குறிப்பாக சிறுமுகை வனப்பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் இன்... மேலும் பார்க்க

"பொருளாதார வளர்ச்சியா? மக்கள் வாழ்வாதாரமா?" - கனிம அகழ்வாராய்ச்சி விதிகளில் அதிரடி விலக்கு|அலசல்

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கிய கனிமங்களையும், 6 வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமை... மேலும் பார்க்க

சஹாரா பாலைவனத்தை வென்ற 54 வயது சென்னைவாசி: ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ சாதனையும் சமூக சேவையும்!

உலகின் மிகக் கடினமான ஓட்டப்பந்தயமாகக் கருதப்படுவது ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ (Marathon des Sables - MDS). வெறும் ஓட்டம் மட்டுமல்ல, சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்தில், மணல் குன்றுகளுக்கு இடையே ஏழு நாட்க... மேலும் பார்க்க

Pablo Escobar-ன் 80 நீர்யானைகளைக் கொல்லும் கொலம்பியா அரசு - அதிரடி முடிவின் பின்னணி என்ன?!

கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் மன்னன் பாப்லோ எஸ்கோபார், 1980-களில் தனது பண்ணைக்காக ஆப்பிரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் நீர்யானைகள், இன்று அந்த நாட்டின் சு... மேலும் பார்க்க