செய்திகள் :

தனிக்கட்சி டு தவெக: அ.தி.மு.க, தி.மு.க-வை பின்னுக்கு தள்ளிய புது முகம்! யார் இந்த ஜெகநாத் மிஸ்ரா?

post image

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். குறிப்பாக தேனி தி.மு.க - வில் குறிப்பிடத்தக்க நபராக இருக்கும் கம்பம் ராமகிருஷ்ணனை 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார் ஜெகநாத் மிஸ்ரா. மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்த ராமகிருஷ்ணனை, புதுமுகமான ஜெகநாத் மிஸ்ரா தோற்கடித்திருப்பது தேனி மாவட்டத்தையே அதிர வைத்திருக்கிறது.  

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியிலுள்ள நாரயணதேவன்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாத் மிஸ்ரா. தொழிலதிபரான இவர் செட்டியார் சமூக அமைப்புகளில் தலைமை பொறுப்புகளை வகித்து வந்தார். பின்பு அரசியலுக்குள் வரவேண்டும் என்கிற எண்ணத்தால் ’நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி தேனி மாவட்டத்தில் அறியப்படுகிற நபராக மாறினார். தேர்தலுக்கு முன்பாக கட்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி மற்ற கட்சிகளின் கவனத்தை ஈர்த்தவர், தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைந்து கம்பம் தொகுதியில் போட்டியிட்டார்.

ஜெகநாத் மிஸ்ரா

த.வெ.கவை தாண்டி தனக்கென தனித்த செல்வாக்கு கொண்டிருந்தார் ஜெகநாத் மிஸ்ரா.  இளைஞர்களோடு கூட்டாக தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ததது மக்களிடம் எடுப்பட்டது. ஜெகநாத் மிஸ்ரா சாதி குறித்து மேடைகளில் பேசிய காணொலிகளை எதிர்கட்சிகள் எடுத்து பரப்பியது சர்ச்சையை கிளப்பியதோடு வெற்றி பெற மாட்டார் என்கிற பேச்சுகளும் எழுந்தது.

இந்த கணிப்புகளையெல்லாம் உடைத்து ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கமால், தி.மு.க -வின் அசைக்க முடியாத நபராக இருந்த ராமகிருஷ்ணனை 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கம்பம் தொகுதியில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் ஜெகநாத் மிஸ்ரா.  

கேரளம்: `இரண்டரை ஆண்டுக்கு ஒரு முதல்வர்?' - 140ல் 102 வென்றும் காங்கிரஸ் முடிவு வெளியாவதில் தாமதம்!

கேரள மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் வெற்றிபெற்ற பிறகும் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் திணறுகிறது டெல்லி தலைமை. தேர்தலி... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடம்: அரசியல் கட்சிகளின் விமர்சனமும் தவெக அரசின் விளக்கமும்!

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய அரசு பதவியேற்ற நிகழ்வில், 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகப் பாடப்பட்ட விவகாரம் அரசியல் சர்ச்சையாக வெடித்தது.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப... மேலும் பார்க்க