`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த ச...
தள்ளிப்போன 'ஜனநாயகன்'; ரேஸில் இணைந்த கார்த்தி, ஜீவா படங்கள்! - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ் இவைதான்!
பொங்கல் வெளியீடாக விஜய்யின் ‘ஜனநாயகன்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ என இரண்டு திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு அறிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ‘பராசக்தி’ திரைப்படம் மட்டுமே திட்டமிட்டபடி கடந்த 10-ம் தேதி வெளியானது.

அதைத் தாண்டி பொங்கல் ரிலீஸுக்காக பல தெலுங்கு திரைப்படங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் ‘மன ஶங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து ரவி தேஜாவின் ‘பர்தா மஹாசாயுலகி விக்ஞாப்தி’ என்ற திரைப்படம் 13-ம் தேதியும், நவீன் பொலிஷெட்டியின் ‘அனகனக ஒக்க ராஜு’ திரைப்படம் 14-ம் தேதியும் வெளியாகிறது.
இந்நிலையில் அடுத்தடுத்து மூன்று தமிழ் திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகின்றன என அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், அப்போது அப்படத்தின் ரிலீஸ் தடைபட்டது.

பிரச்னைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ‘வா வாத்தியார்’ படம் வருகிற 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளிவந்த ‘ஃபலிமி’ படத்தின் இயக்குநர் நித்திஷ் சஹாதேவ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் 15-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
மேலும், ‘திரௌபதி 2’ திரைப்படமும் அதே 15-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.














