தாக்கரே சகோதரர்களா... பாஜக, ஷிண்டே கூட்டணியா?- மும்பை மாநகராட்சி தேர்தலில் மக்கள...
திருமண வாழ்க்கையில் நுழைந்தார் பிக்பாஸ் ஜூலி! - இன்று நிக்காஹ், நாளை சர்ச்சில் வரவேற்பு!
சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலியின் திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. நீண்ட நாள்களாக காதலித்து வந்த முகமது என்பவரைக் கரம் பிடித்தார்.
சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று இஸ்லாம் முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் வீட்டாருக்கு நெருக்கமான உறவினர்களும் நண்பர்களும் இந்த நிக்காஹ்'வில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
ஜூலி தரப்பு சொந்தங்களுக்காக நாளை சென்னை பரங்கிமலை பேட்ரிக் தேவாலயத்தில் கிறிஸ்தவ முறையிலான திருமணமும் நடைபெறவிருக்கிறது.

நாளை மாலையே பரங்கிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் வரவேற்பும் இருக்கிறது.
முன்னதாக இவர்களின் திருமணத்துக்கான வீடியோ அழைப்பிதழில் இந்து மத வழக்கபடி திருமண மேடைகளில் தாலி கட்டியதும் ஒலிக்கும் மங்கல இசையையும் இடம்பெற்றிருந்தது.
மணமகனும் மீடியா துறையில்தான் இருக்கிறார். டிவி சினிமா பிரபலங்கள் நாளை நடக்கவிருக்கும் வரவேற்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
பொங்கல் திருநாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமடைந்த ஜூலிக்கு இதே நாளில் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


















