செய்திகள் :

தேமுதிக: ``2026 தேர்தலுக்குத் தயார், 234 தொகுதியும் எங்கள் இலக்கு" - பிரேமலதா கொடுத்த அப்டேட்

post image

தேமுதிகவின் இளைஞர் அணிச் செயலாளரான விஜய பிரபாகரனின் 34-வது பிறந்தநாள் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இன்றைக்கு விஜய பிரபாகருடைய பிறந்த நாள். விமானம் ரத்து போன்ற சிக்கலால் விஜய பிரபாகரன் இன்னும் சென்னை வந்து சேரமுடியவில்லை.

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

மும்பையில் அதிகாலை 4 மணியிலிருந்து விமான நிலையத்தில் காத்திருக்கிறார். இன்று மாலைக்குள் சென்னை வந்துவிடுவார். தம்பியை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

இந்த மாதம் 28-ம் தேதி கேப்டனுடைய குரு பூஜை நிகழ்ச்சி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும், நிர்வாகிகள் தொண்டர்கள் வருகிறார்கள். அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

ஏற்கெனவே மூன்று கட்டம் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' மற்றும் 'மக்களைத் தேடி மக்கள் தலைவர்' ரத யாத்திரையை முடித்திருக்கிறோம்.

ஜனவரி 9 கடலூரில் நடக்கின்ற மாநாடுக்கும் தயாராகி வருகிறோம். அந்த மாநாடுதான் இப்போதைக்கு எங்களுடைய அடுத்த இலக்கு. அந்த மாநாட்டில் ஒரு நல்ல ஒரு அறிவிப்பு நிச்சயமாக வழங்குவோம்.

கேப்டன் இருந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளும், மத்தியில் இருக்கும் கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். அந்த வகையில எல்லாருமே தோழமையோடு, நட்புணர்வோடு பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நல்ல ஒரு தகவலை அறிவிப்போம்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

எங்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் களத்தில் இருக்கிறார்கள். ஒருவருடமாக இந்தத் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 68000 பூத்திலும் பூத் கமிட்டி அமைத்திருக்கிறோம்.

எனவே, தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் இப்போது உங்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 234 தொகுதிகளும் எங்கள் இலக்குதான்.

காங்கிரஸ் - தாவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்றால் அது குறித்து அவர்களிடம்தான் பேச வேண்டும். எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடையாது. எல்லா கட்சியும் எங்களுக்கு நட்புதான் என்பதால், உரிய நேரத்தில் தெளிவாக பதில் சொல்லவோம்." என்றார்.

"2026 மே மாதம் முதல் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய்" - செங்கோட்டையன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக ... மேலும் பார்க்க

``வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்" - அன்புமணி

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் போன்ற ஒன்றை அருந்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்... மேலும் பார்க்க

Vote chori: மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ராம் லீலா மைதானம்; காங்கிரஸ் திட்டம் என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பா.ஜ.க வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார். பா.ஜ.க-வின் இந்த வாக்கு திருட்டுக்கு தேர்த... மேலும் பார்க்க

`மூச்சுத் திணறல்' - நல்லகண்ணு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில், 22.08.2025 அன்று நல்லகண்ணு வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் ... மேலும் பார்க்க

Vijay : திருச்செங்கோட்டில் போட்டியிடும் அருண் ராஜ்; முதல் வேட்பாளரை அறிவிக்கும் தவெக! - விவரம் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னமும் இரண்டரை மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், தவெக தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று முதல் அறிவிக்க திட்டமிட்டிருக்கிறது. அதன்படி ஈரோட்டின் ... மேலும் பார்க்க