BB Tamil 9 Day 69: ‘கேக்கல... சத்தமா... கேக்கல.. ‘ - பிகில் விஜய்யாக மாறிய விசே
AI வளர்ச்சி: ``நீங்களும் நானும் தான் கடைசி தலைமுறை" - வெளிப்படையாக பேசிய புனீத் சந்தோக்
Lமைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனீத் சந்தோக் மற்றும் உலகின் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் Microsoft AI Tour என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியா வந்திருக்கின்றனர்.
அவர்கள் மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய புனீத் சந்தோக், `` பெரும்பாலானவர்கள் AI செயற்கை நுண்ணறிவு வேலைகளைப் பறித்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், உண்மையில் AI தானாகவே வேலைகளைப் பறிக்காது.

இருப்பினும், வேலைவாய்ப்பு இழப்புக்கு உண்மையான அச்சுறுத்தல் 'கற்றுக்கொள்ள மறுப்பது' என்ற வடிவத்தில் வரும். இந்த புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள வேலைகளைப் பகுப்பாய்வு செய்து பணிகளை பிரித்துவிடும். அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வேகமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
அதனால், தொழில்துறை அமைப்பே மாறிவருகிறது. அதாவது ஒருமுறை கற்றுக்கொண்டு, அந்த அறிவை வாழ்நாள் முழுவதும் ஒரு தொழிலுக்குப் பயன்படுத்துவது என்ற கருத்து இப்போது சிதைந்து வருகிறது. நீங்களும் நானும் தான் நிலையான, நீண்ட கால வேலைவாய்ப்புகளைக் கொண்ட கடைசித் தலைமுறை. நம் குழந்தைகள் பலவிதமான பணிகளைச் செய்வார்கள்.
எனவே இந்த புதிய தொழில்நுட்ப யுகத்தில் கற்றல் என்பது மிகவும் அவசியமானது. அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் டெல்லியில் வசிப்பவரை விட ஆக்ஸிஜன் மாஸ்க்கின் முக்கியத்துவத்தை வேறு யாரும் நன்கு புரிந்துகொள்ள முடியாது. அப்படித்தான் இந்த வளர்ந்து வரும் AI உலகம்." என்றார்.
அதைத் தொடர்ந்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ``செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எந்தவொரு நிறுவனத்திற்கும் தரவுதான் மிகவும் மதிப்புமிக்க வளம். ஆனால், அந்தத் தரவை நீங்கள் செயற்கை நுண்ணறிவுக்குப் பொருத்தமான சூழலில் பயன்படுத்த வேண்டும்.

மகாராஷ்டிரா மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவு கருவிகளை இணையப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகிறது. மகாராஷ்டிராவின் 23 காவல் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள நாக்பூர் திட்டம் மூலம் இணையக் குற்ற விசாரணைகளை 80 சதவீதம் குறைத்திருக்கிறது.
மேலும் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 1,100 காவல் நிலையங்களுக்கும் இதை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது தவிர, அதானி சிமென்ட், யெஸ் வங்கி, ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் எல்டிஐமைண்ட்ரீ போன்ற பல வாடிக்கையாளர்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்றி வருகிறது" என்றார்.














