நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிள...
"2026 மே மாதம் முதல் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய்" - செங்கோட்டையன்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயர்மட்ட குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் செங்கோட்டையன், "அதிமுகவில் இருந்து மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் தவெகவில் இணைகிறார்கள். தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என யாராலும் ஊகிக்க முடியாது, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தவெகவிற்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. மக்கள் சக்தி இருக்கிறது. போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது, மக்கள் சக்தியால் விஜய் முதல்வர் ஆவார்.
தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு விஜய்யை விட்டால் யாருமில்லை. இளைஞர்களைத் தட்டியெழுப்பும் ஆற்றல் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது.

2026 மே மாதம் முதல் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம். தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே கூட்டணியில் இணைய முடியும். இதுவே நமது லட்சியப் பயணம். சேர வேண்டிய இடத்தில் நான் சேர்ந்திருக்கிறேன்" என செங்கோட்டையன் தெரிவித்தார்.










