`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' - உதயநிதி ஸ்பீச் ஹை...
வேட்பாளர்களை விஜய்தான் அறிவிப்பார்! - தவெக ஆனந்த் விளக்கம்!
தவெகவின் திருச்செங்கோடு தொகுதி வேட்பாளராக அருண் ராஜை நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தும் கொங்குமண்டல அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனும் அறிமுகப்படுத்தி வைப்பார்கள் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆனந்த் வேட்பாளர் பட்டியலை விஜய்தான் வெளியிடுவார் எனக் கூறியிருக்கிறார்.

திருச்செங்கோடு தொகுதியில் தவெகவின் பூத் கமிட்டி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான அருண் ராஜை வேட்பாளராக அறிவித்து அவருக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்க கோருவார்கள் என தகவல் வெளியானது.
இந்நிலையில் அக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் ஆனந்த் அதை மறுத்திருந்தார். அவர் பேசியதாவது, 'வேட்பாளர் பட்டியலையெல்லாம் தலைவர் விஜய்தான் அறிவிப்பார். 234 தொகுதிகளிலும் தலைவர்தான் போட்டியிடுகிறார் எனும் மனநிலையில் இருக்கிறோம்.

டிசம்பர் 18 ஆம் தேதி தலைவர் ஈரோடு வருகிறார். செங்கோட்டையன் அண்ணன் அந்த நிகழ்ச்சியை எவ்வளவு சிறப்பாக திட்டமிட்டிருக்கிறார் என்பதை அங்கே பார்ப்பீர்கள்' என்றார்.











