செய்திகள் :

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!

post image

மார்கழி என்றாலே உற்சாகம்தான். மார்கழி மாதத்தின் விடியற்காலைகள் பாசுரங்களாலும், வண்ண வண்ணக் கோலங்களாலும் எழில் கூடும். மனதில் மகிழ்ச்சி பெருகும். அப்படி நீங்கள் போடும் கோலத்திற்கு பரிசும் கிடைக்கும் என்றால், கூடுதல் மகிழ்ச்சிதானே?! அதற்கு... உங்களுடன் இணையவிருக்கிறது சென்னையிலிருக்கும் கீதம் உணவகம்!

கோலம் போட்டி
கோலம் போட்டி

கீதம் உணவகம் நடத்தும் மாபெரும் நிகழ்வு.. ‘மார்கழி வண்ணக் கோலம் போட்டி’! இதில் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளன அவள் விகடன் இதழ் மற்றும் தினமலர் நாளிதழ். இப்போட்டியில் பங்கு பெற சென்னையில் உள்ள கீதம் உணவகங்களில் நீங்கள் கோலம் போட வேண்டும். டிசம்பர் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தினமும் காலையில் 4 மணி முதல் 7 மணி வரை போட்டியாளர்கள் கோலம் போட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த 16 நாள்களில் போடப்பட்ட கோலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கோலங்களுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. முதலிடம் ரூ.25,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன், இரண்டாமிடம் ரூ.10,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன், மூன்றாமிடம் ரூ.5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்படும்.

அனைத்துப் போட்டியாளர்களுக்கும் கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனம் வழங்கும் ரூ.500 மதிப்பிலான பரிசுக் கூப்பனும், கீதம் உணவகம் சார்பாக 250 மதிப்பிலான பரிசுக் கூப்பனும் வழங்கப்படும். கூடவே, போட்டியாளர்கள் அனைவருக்கும் கீதம் உணவகத்தில் காலை உணவு வழங்கப்படும். தினமும் 50 கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு விகடன் இணையதளத்தில் வெளியிடப்படும்.

கோலம் - கோப்புப்படம்
கோலம் - கோப்புப்படம்

போட்டியில் பங்கு பெற விதிமுறைகள்...

* போட்டியில் அனைத்து பாலினத்தவரும், அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.

* அண்ணா சாலை, தி. நகர், அண்ணா நகர், வேளச்சேரி, பல்லாவரம், அசோக் நகர், போரூர், மேடவாக்கம். துரைப்பாக்கம், நாவலூர், ஈ.சி.ஆர், ஊரப்பாக்கம், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கீதம் உணவகங்களில் கோலம் போடப்பட வேண்டும்.

* காலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோலம் போட அனுமதி வழங்கப்படும்.

https://docs.google.com/forms/d/1U4Anfb-zmZv1lGueay9GBxt36BFeepfFkwqRrRv6HLo/edit?usp=drivesdk என்ற இணைப்பு மூலமோ; 73972 22111 என்ற மொபைல் எண்ணுக்கு அழைத்தோ, நேரடியாக கீதம் கிளைகளுக்குச் சென்றோ பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு கிளையிலும் ஒரு நாளைக்கு 10 பேர் மட்டுமே கோலம் போட அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

* ஒரு நபர் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

* கோலம் போடத் தேவையான பொருள்களை போட்டியாளர்களே கொண்டு வரவேண்டும்.

* வெற்றியாளர்களை முடிவு செய்வதில் தேர்வுக்குழுவின் தீர்ப்பே இறுதியானது.

குழந்தைகளை விழுங்கும் சோஷியல் மீடியாக்கள்... காப்பாற்றுவதற்கு வந்துவிட்டது புது ரூட்!

குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் உருவாகும் பிரச்னைகள் மற்றும் ஆபத்துகள், ‘உலக அளவில் பெரும் தலைவலி’ என உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், உலகிலேயே முதல் நாடாக 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ச... மேலும் பார்க்க