Indigo: `தொடரும் விமான ரத்து, தாமதம்' - பயணிகள் ஆர்ப்பாட்டம்; இண்டிகோ நிறுவனத்து...
நாகாலாந்து: 'வெட்டுக்கிளி, பட்டுப்புழு, பூனை' - திகைத்த சுற்றுலாப் பயணி; வைரலான உணவுப் பட்டியல்
நாகாலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழா இப்போது தொடங்கி நடந்து வருகிறது.
விழாவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்கும். சுற்றுலாப் பயணிகளைக் கவர விழாவில் நாகாலாந்து பாரம்பர்ய உணவு வகைகள் இடம் பெற்று இருந்தன.
அதோடு நாகாலாந்து மக்களின் பாரம்பர்ய நடன நிகழ்ச்சிகள் விழாவில் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. இத்திருவிழாவில் இடம் பெற்றுள்ள உணவு வகைகளில் பெரும்பாலானவற்றை வட கிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநில மக்கள் சாப்பிடுவது கிடையாது.

நாகாலாந்து விழாவில் இடம்பெற்றிருந்த உணவு பட்டியலை வெளிநாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "உணவகத்தின் உணவுப் பட்டியலை மேலிருந்து பார்த்தபோது பெரிதாக எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. அப்படியே பட்டியலில் கீழே வந்தபோது அதில் இடம் பெற்று இருந்த பட்டுப்புழு லார்வாக்கள், நத்தைகள், வெட்டுக்கிளிகள், சிலந்திகள், முள்ளம்பன்றியின் தோல் மற்றும் இறுதியாக, பூனை இறைச்சி போன்றவை ஆச்சரியப்பட வைத்தன.
அதனைப் பார்த்து எப்போதுமில்லாத அளவுக்குச் சிரித்தேன். என் வாழ்நாளில் நான் இதுவரை கண்டிராத வினோதமான உணவு வகைகள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தப் பதிவு வெளியானவுடன் நெட்டிசன்களும் ஆச்சரியத்துடன் தங்களது பதிவுகளை வெளியிட்டு இருந்தனர். பட்டுப்புழுக்கள், வெட்டுக்கிளிகள் மற்றும் சிலந்திகள் போன்ற பூச்சிகள் கூட வடகிழக்கு மாநிலங்களில் சுவையான உணவுகளாகக் கருதப்படுகின்றன.
வடகிழக்கு மாநில பழங்குடியின மக்கள் பாரம்பர்யமாக இது போன்ற உணவுகளைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

















