செய்திகள் :

"நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் எங்களின் நிலைமை மோசம்" - பாக். அமைச்சர் ஆதங்கம்

post image

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இதனால் பாகிஸ்​தானில் பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது.

இந்​நிலை​யில் பாகிஸ்​தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பெர்​வேஸ் மாலிக் பாகிஸ்தானிடம் ஒரு நாள் கூட அவசரக் காலத் தேவைகளுக்கான கையிருப்பு இல்லை என்றும் இந்தியா நினைத்தால் ஒரே கையெழுத்தில் இந்தியாவின் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

எரிபொருள்
எரிபொருள்

எரிபொருள் தட்டுபாடு குறித்து பேசியிருக்கும் அவர், "எரிபொருள் வளத்​தில் பாகிஸ்​தான் நிலைமை மோச​மாகவே இருக்​கிறது. பாகிஸ்​தானிடம் தற்​போது அவசர கால தேவைக்​கான எரிபொருள் இருப்பு ஒரு நாள் கூட கிடை​யாது என்​பதே உண்​மை.

எங்​களிடம் இருப்​பது வணிக ரீதி​யான இருப்பு மட்​டுமே. கச்சா எண்​ணெய் 5 முதல் 7 நாட்​களுக்கு மட்​டுமே வரும். எண்​ணெய் நிறு​வனங்​களிடம் உள்ள சுத்​தி​கரிக்​கப்​பட்ட எரிபொருள் அதி​கபட்​சம் 20 முதல் 21 நாட்​களுக்கு மட்​டுமே இருக்​கும். நாங்​கள் இந்தியாவைப் போன்​றவர்​கள் அல்ல.

இந்​தி​யாவோ 70 நாட்​களுக்​குத் தேவை​யான எரிபொருளைச் சேமித்து வைத்துள்ளது. அங்கு ஒரு நெருக்​கடி ஏற்​பட்​டால், ஒரு கையெழுத்​தில் அந்த இருப்பை வெளி​யிட்டு அவர்​களால் நிலை​மை​யைச் சீர் செய்ய முடி​யும்.

நீண்ட காலத்​துக்கு எரிபொருள் தேவையைச் சமாளிக்க இயலும். ஆனால், பாகிஸ்​தான் எளி​தில் நிலைகுலையும் நிலையில் உள்ளது. புதிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க அதிக நிதி தேவைப்படுவதால், தற்போதைய பொருளாதாரச் சூழலில் பாகிஸ்தானால் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை.

இந்தியா
இந்தியா

இந்திய அரசு தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்காக நிலத்தடியில் மிகப்பெரிய சேமிப்புக் கிடங்குகளை அமைத்துள்ளது. அவசர காலங்களில் அல்லது போர்ச் சூழலில் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், பாகிஸ்தானிடம் அத்தகைய பிரத்யேக அரசு சேமிப்பு வசதிகள் எதுவும் இல்லை" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க