``என் உழைப்பிற்கு மதிப்பளித்த தேசம்" - குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் சிறப்பு அ...
நாமக்கல்: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்; நிகழ்விடத்தில் மூவர் பலியான சோகம்
நாமக்கல்லில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது.
நாமக்கல்-திருச்சி பிரதான சாலையில் ரமேஷ் தியேட்டர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, நாமக்கல் நோக்கி எதிர்புறத்தில் சாக்குப் பை ஏற்றி வந்த மினி வேனும், டேங்கர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அப்போது, மினி வேனுக்குப் பின்னால் வந்த இருசக்கர வாகனமும் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், ஜெய்நகரைச் சேர்ந்த சேனாதிபதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மினி வேனை ஓட்டி வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர் மற்றும் மினி வேனில் வந்த மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளது நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
















