மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: 2வது இடத்தில் அஜித் பவார் கட்சி; தோல்வியடைந்த வ...
பட்ஜெட்டில் கனிம வழித்தடங்கள் அறிவிப்பு... இயற்கை வளங்களை சுரண்டி கார்ப்பரேட்களுக்கு விற்பதற்கா?
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
மத்திய பட்ஜெட் 2026-ல் வேளாண்மை மற்றும் சூழல் சார்ந்த பல அறிவிப்புகள் வெளிவரும் என்று விவசாயிகளும், சூழல் ஆர்வலர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
குறிப்பாக, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிப்பது, தடுப்பது, பேரிடர் முன்னெச்சரிக்கை ஆகியவை குறித்த முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இல்லாததுடன், மேற்கொண்டு, இந்தியாவின் இயற்கை வளங்களைப் பெரு நிறுவனங்கள் சுரண்டிக்கொள்ளப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அணுக்கனிமங்கள், அரியவகை முக்கியக் கனிமங்கள் அனைத்தையும் அகழ்ந்தெடுப்பதற்கான உரிமை தனியார் நிறுவனங்கள் வசம் உள்ளது. இக்கனிமங்கள் கிடைப்பதாகக் கண்டறியப்படும் நிலங்களை ஏலமிடும் உரிமை மத்திய அரசிடம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு அதை எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில், அரியவகைக் கனிமங்களை அகழ்ந்தெடுத்தல், பிரித்தெடுத் தல், ஆய்வுகள் செய்தல், உற்பத்தி செய்தல் போன்ற பணிகளுக்காக... தாது வளம் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் அரியவகைக் கனிமங்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தமிழகத்தில் விவசாய நிலங்களை அழித்துப் பல இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரியவகைக் கனிமங்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்பட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டால், எதிர்காலத்தில் தமிழகத்துக்குப் பேராபத்து நேர வாய்ப்புள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுவே நிலைமை. இந்த அறிவிப்பு, சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் எதிராக இருப்பதோடு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறக்கூடிய வகையில் இருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடந்த தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைத்து, ‘இயற்கை விவசாயத்தால்தான் சுற்றுச்சூழல் மேம்படும், பூமித்தாய் ஆரோக்கியமாக இருப்பாள்’ என்றெல்லாம் சுற்றுச்சூழல் காவலரைப்போல் பேசிய பிரதமர் அவர்களே... மூன்றே மாதங் களில் அதிகாரபூர்வமாகவே பூமித்தாயை காவு கொடுப்பது நியாயமா?
வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நல்ல திட்டங்களை அறிவிக்கா விடில்கூட பரவாயில்லை... நாசப்படுத்தாமலாவது இருங்கள் ஆட்சியாளர்களே!
- ஆசிரியர்

















