செய்திகள் :

'பள்ளி, கல்லூரி அருகே இருக்கும் 717 மதுபான கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட வேண்டும்' - விஜய் அதிரடி

post image

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அது குறித்து செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

"பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

டாஸ்மாக்
டாஸ்மாக்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது.

மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்".

DMK: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி - பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு | Tamilnadu Live Updates

பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்புசிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தமிழ்நாடு சட்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 'ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்' - வெங்காய விலையின் கடும் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

நாட்டில் வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா முன்னணியில் இருக்கிறது. அடிக்கடி அதிகப்படியான விளைச்சல் காரணமாக வெங்காய விலை மிகவும் மோசமாகச் சரியும். இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுண்டு. தற்போத... மேலும் பார்க்க

'நெருக்கடியில் தோள்கொடுத்த நண்பர்' - அமெரிக்க போரின்போது விமானங்களை பாகிஸ்தானிற்கு மாற்றியதா ஈரான்?

பிப்ரவரி மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தன்னிச்சையான தாக்குதலைத் தொடுத்தது. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரான் மத உச்சத் தலைவர் கமெனி மற்றும் முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.... மேலும் பார்க்க

Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" - விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' என்றால் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப் போட்டார் தவெக தலைவர் விஜய். அடுத்து, மக்களுக்கு சின்ன 'ஸ்பீச்'சும் கொடுத்தார். இது இரண்டுமே தமிழ்நாடு அரசியலில் ப... மேலும் பார்க்க

இபிஎஸ் vs சி.வி.சண்முகம்: சட்டசபையில் வெளிச்சத்திற்கு வந்த அதிமுக பூசல்; யாருக்கு எத்தனை MLA ஆதரவு?

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் சவாலாக அமைந்துவிடவில்லை. இந்த முடிவால் அதிமுகவும் சத்தமில்லாமல் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதிமுக தொடங்கிய கால... மேலும் பார்க்க

"எனக்கு மட்டும் மகள் இருந்தா..." - MGR-ஐ கவர்ந்த ஜே.சி.டி பிரபாகர்! புது சபாநாயகரின் அரசியல் பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். பதினேழாவது சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று காலை ப... மேலும் பார்க்க