மீண்டும் பவுனுக்கு ரூ.91,000-த்தை தாண்டிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம...
பொங்கல் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் தொடங்கிய ரயில் டிக்கெட் புக்கிங்! | Full Timetable
இன்று முதல் பொங்கல் ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு (2026), போகி பண்டிகை 13-ம் தேதி (செவ்வாய்) தொடங்கி காணும் பொங்கல் 16-ம் தேதியோடு (வெள்ளி) முடிகிறது.
திங்கள்கிழமை (12-ம் தேதி) மட்டும் லீவோ, வர்க் ஃப்ரம் ஹோமோ எடுத்துக்கொண்டால் போதும், 9-ம் தேதியே ஊருக்கு கிளம்பிவிடலாம்.
ஜனவரி 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு கிளம்ப வேண்டுமானால், இன்று டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது.

எப்போது எந்தெந்த தேதி டிக்கெட்டுகள்?
நாளை (நவம்பர் 11, 2025) - ஜனவரி 10-ம் தேதிக்கு டிக்கெட் புக் செய்யலாம்.
நவம்பர் 12, 2025 (வரும் புதன்கிழமை) - ஜனவரி 11, 2026
நவம்பர் 13, 2025 (வரும் வியாழக்கிழமை) - ஜனவரி 12, 2026
நவம்பர் 14, 2025 (வரும் வெள்ளிக்கிழமை) - ஜனவரி 13, 2026
நவம்பர் 15, 2025 (வரும் சனிக்கிழமை) - ஜனவரி 14, 2026
நவம்பர் 16, 2025 (வரும் ஞாயிற்றுக்கிழமை) - ஜனவரி 15, 2026
நவம்பர் 17, 2025 (அடுத்த வாரம் திங்கட்கிழமை) - ஜனவரி 16, 2026
நவம்பர் 18, 2025 (அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை) - ஜனவரி 17, 2026
நவம்பர் 19, 2025 (அடுத்த வாரம் புதன்கிழமை) - ஜனவரி 18, 2026 - இன்று ஊரில் இருந்து கிளம்புவதற்கான டிக்கெட் புக் செய்ய வேண்டும்.
இந்த டிக்கெட் புக்கிங் ஒவ்வொரு நாள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
















