செய்திகள் :

"முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள்"- சிவகார்த்திகேயன்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி 105 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

த.வெ.க தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

விஜய்யின் இந்த அதிரடி வெற்றிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தவெக விஜய்
தவெக விஜய்

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் த.வெ.க தலைவர் விஜய்யை வாழ்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள்.

நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்" என்று நெகிழ்ச்சியாக வாழ்த்தியிருக்கிறார்.

'ஆளுநரின் இந்த செயல் அருவருப்பானது; விஜய்யை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்!' - பிரகாஷ் ராஜ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுகவில் இருந்து ... மேலும் பார்க்க

RB Choudary: "என் 100வது படத்தில் நீங்கதான் நடிக்கணும்னு சொல்லியிருந்தார்" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களைத் தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. ... மேலும் பார்க்க

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க

RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" - கலங்கும் விக்ரமன்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க