செய்திகள் :

முன்னரே கையெழுத்தான ஈரான் - அமெரிக்கா MoU; ட்ரம்ப், பெசெஷ்கியான் டிஜிட்டல் கையெழுத்து!

post image

3 மாதங்கள் 20 நாள்கள் கழித்து அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஈரான் போர் தொடங்கியதில் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் பிரச்னையில்லை... பாதிப்பில்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டதில் உலக நாடுகள் அனைத்துமே பாதிப்பைச் சந்தித்தன.

இதனால், உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்திருந்த தருணம் இதுதான்.

ஏப்ரல் மாதத்திலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தம் இருந்தாலும், லெபனானை இஸ்ரேல் தாக்குவது, ஈரான் ஆதரவுக்குச் செல்வது, அமெரிக்கா 'தற்காப்புத் தாக்குதல்' நடத்துவது, ஈரான் மத்தியக் கிழக்கு நாடுகளைத் தாக்குவது என அவ்வப்போது நடந்து வந்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய, பேச்சுவார்த்தையும் நடந்திக்கொண்டேதான் இருந்தது.

மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து
மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

அதன் விளைவாக, நாளை (ஜூன் 19), ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதாக இருந்தது.

ஜி7 மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரான்ஸ் சென்றிருக்கிறார். பிரான்ஸில் உள்ள வெர்சாயில், முன்பாகவே நேற்று (பிரான்ஸ் நேரப்படி), ட்ரம்ப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிஜிட்டலாகக் கையொப்பமிட்டுள்ளார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஈரான் தலைநகரான டெஹ்ரானில் இருந்துகொண்டே டிஜிட்டல் வழியாக கையெழுத்திட்டுள்ளார்.

ஆக, முன்பதாகவே, ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பி.டி.ஆர் vs மரிய வில்சன் : தவெக அரசின் வெள்ளை அறிக்கையின் போதாமைகள் என்னென்ன?

தமிழகத்தின் நிதி நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது த.வெ.க-வின் கூட்டணி அரசு. கடந்த 5 ஆண்டுகளில் கஜானா எந்தளவுக்கு காலியாக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிக்க... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்க்கு செவித்திறன் கருவியை அனுப்பிய கோவை சமூக ஆர்வலர்; காரணம் என்ன?

தமிழ்நாட்டில் தொடர்ந்து குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும்பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் நிலையில், அவற்றுக்குஎதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முதலமைச்சரை விஜய்யைக் கண்டித்து, கோவ... மேலும் பார்க்க

`அப்செட், நோஸ்கட்... ரணகளமான பனையூர் கூட்டம் டு சீண்டிப் பார்க்கும் சி.வி சண்முகம்!' | கழுகார்

ரணகளமான பனையூர் கூட்டம்!அப்செட்... நோஸ்கட்...தேர்தலுக்கு பின் பனையூரில் நடந்த முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தொகுதிகளை வெல்ல வைத்த மா.செ-க்களுக்கு பாராட்டுக்கு பதிலாக ஷாக் கொடுத்து அனுப்பியிர... மேலும் பார்க்க

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்: தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா? | Live News Updates

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா? முதலமைச்சர் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழா என இதுவரையிலான நிகழ்வுகளில் 'வந்தே மாதரம்' தான் முதலில் பாடப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்த... மேலும் பார்க்க

தனியார் நிறுவனத்திடம் மாசப்படி பெற்ற வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான பினராயி விஜயன் மகள்!

கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் கருமணல் கம்பெனியான ​சி.எம்.ஆர்.எல் மற்றும் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலோஜிக் நிறுவனம் இடையேயான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்த... மேலும் பார்க்க