செய்திகள் :

'யார் யாரை ஏமாற்றுகிறார்கள்?' - திமுக, பாஜகவை சாடிய பிரவீன் சக்கரவர்த்தி

post image

தமிழக அரசியல் பரப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் சூழலில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கட்சிகளின் உரையாடல்களை வைத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்...

தவெக: “எங்களுடையது மதச்சார்பற்ற கொள்கை.”

தமிழக வாக்காளர்கள்: “எங்களுக்கு தவெக-வின் மதச்சார்பற்ற ஆட்சி தான் வேண்டும்.”

காங்கிரஸ் : “சரி. நாம் தவெக-விற்கு ஆதரவு அளித்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.”

தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்
தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்

பாஜக : “இல்லை. மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுத்தே ஆக வேண்டும்.”

திமுக: “சரிங்க ஐயா. நாங்கள் உங்கள் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம்; மற்ற மதச்சார்பற்ற கட்சிகள் தவெக-விற்கு உதவாமல் இருக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.”

யார் யாரை ஏமாற்றுகிறார்கள் (துரோகம் செய்கிறார்கள்)?" என்று பதிவிட்டிருக்கிறார்.

'ஐயா... என் எம்.எல்.ஏவை விலை பேசுறாங்க...' - நள்ளிரவில் ராஜ் பவனில் குமுறிய டிடிவி தினகரன்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்றிரவு 9 மணிக்கு மேல் திடீரென ஆளுநர் மாளிகை வந்து, 'அமமுக சார்பில் வென்ற காமராஜ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக போலி கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய எம்.எல்... மேலும் பார்க்க

”எஸ்.காமராஜ் மீது சந்தேகம் இருந்தது”- தவெக ஆதரவு விவகாரம் கொதிக்கும் மன்னார்குடி அமமுகவினர்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். இவர் தமிழக அரசியலில் நேற்று பேசுபொருளாக இருந்தார். எங்க கட்சி எம்.எல்.ஏ எஸ்.காமராஜை காணவில்லை என ஆளுநரிடம் அ... மேலும் பார்க்க

விஜய் முதல்வர் அரியணையில் அமர திருமா ஆதரவு கொடுப்பாரா? | TN News Live Updates

முதல்வர் அரியணையில் அமர்வாரா விஜய்?நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட... மேலும் பார்க்க