செய்திகள் :

கோவையில் பிரம்மாண்டமாக கட்டப்படும் திருப்பதி கோவில் - திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல்!

post image

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திராவிற்கு வெளியே ஆன்மீக செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தி வரும், 'ஜி ஸ்கொயர்' நிறுவனம், கோவையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள செவன் ஹில்ஸ் சிட்டி என்ற இடத்தில் திருப்பதியில் இருப்பது போலவே, ஒரு பிரமாண்டமான கோயிலை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. இதற்காக ரூ.388 கோடி மதிப்பிலான 19.43 ஏக்கர் நிலத்தை வழங்கவும் அந்த நிறுவனம் முன்வந்தது.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

இது தொடர்பாக கடந்த 5 ம் தேதியன்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுக்கூட்டம், அதன் தலைவர் பொல்லினேனி ராஜகோபால நாயுடு தலைமையில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனம் வழங்கிய நிலத்தை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.‌ இந்த ஒப்புதல் அடிப்படையில் 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் திருப்பதி கோவில் கட்டவும், ஆன்மிக செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கோவைப் புதூர் ஒரு முக்கிய ஆன்மீக மையமாக உருவெடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்: தீய சக்திகளை விரட்டி நல்லருள் தருவாள்!

ஊர்தோறும் அம்மன்கோயில்கள் உண்டு. அவளே காக்கும் தெய்வம். கருமாரி, காமாட்சி, மீனாட்சி என்று பல்வேறு நாமங்கள் கொண்டு மக்களைக் காப்பவள். அவளே பச்சையம்மனாக அருள்பாலிக்கும் தலங்கள் பல உண்டு. அவற்றில் முக்கி... மேலும் பார்க்க

சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் திருக்கோயில்: பெண்களுக்கு செல்வவளமும் நலமும் அருளும் அம்பாள் சந்நிதி!

மயிலாப்பூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது கபாலீஸ்வரர் திருக்கோயில். பலரும் அறியாதது கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கும் சிவத்தலங்கள் குறித்து. மயிலையில் அமைந்திருக்கும் 7 சிவத்தலங்களையும் 'சப... மேலும் பார்க்க

நாகை மாவட்டம், தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் திருக்கோயில்; இழந்த செல்வங்களை மீண்டும் அருளும் ஈசன்!

தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் வழிபாடு செய்வதே தனித்த ஆனந்தத்தைத் தரும் செயல். அந்த வகையில் காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்றான 85 வது பாடல் பெற்ற தலமான தேவூரைத் தரிசனம் செய்வது சிறப்பு. நாகை மாவட்டம் க... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கோலக்கா திருத்தாளமுடையார்: பிள்ளைகளுக்கு சீக்கிரம் பேச்சுவர அருளும் தலம்

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274. அவற்றில் ஞான சம்பந்தர் பாடிய தலங்கள் அனைத்தும் மிகவும் சிறப்புப் பெற்றவை. மூன்று வயதுக் குழந்தையாக சிதம்பரம் தீர்த்தக் குளத்தில் அழுதுகொண்டிருந்த ஞானசம்பந்தருக்கு அம்பி... மேலும் பார்க்க

மதுரை, திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்: உப்பும் மிளகும் வாங்கிப்போட்டால் நோய்கள் விலக்கும்!

அன்னை ஆதி சக்தி மக்களைக் காக்கும்பொருட்டு கோயில்கொண்ட தலங்கள் ஏராளம். அப்படி அன்னை ஒருமுறை சிறுமியாக ஓரிடத்தில் காட்சி கொடுத்தாள். அதுவும் எட்டுகரங்களுடன், வலது காலினை மடித்து அமர்ந்திருந்த திருக்கோலத... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி: நவகிரகங்களின் பணி செய்யும் யமன் சந்நிதி!

காசிக்கு நிகரான தலங்கள் நம் நாட்டில் அநேகம் உள்ளன. அதிலும் ஆயுள் விருத்தி தலம் என்றால் திருக்கடவூர், திருவாரூர் போன்ற தலங்களைச் சொல்லலாம். இவற்றுள் மிகவும் முக்கியமான ஒரு தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்கு ஸ்ர... மேலும் பார்க்க