செய்திகள் :

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

post image

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரக் காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கீழ்திசைக் காற்றுகளின் (Easterlies) வரவு காரணமாக, அடுத்த ஒரு வார காலத்திற்கு மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Rain Alert - மழை
Rain Alert - மழை

தவிர இன்று (மே.9) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்" என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று மாலை கோவை, பழநி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்று... மேலும் பார்க்க

100 கோடி இந்தியர்களை பாதிக்கும் `ஈரப்பத வெப்ப அலை' - காலநிலை மாற்ற விளைவும், தேவையான முன்னேற்பாடும்!

உலகில் அதிக வெப்பம் பதிவான 100 நகரங்களின் பட்டியலில் 98 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ளன. மத்திய அரசின் காற்றுத் தரக் குறியீடு தரவுகளின்படி, இதுவரை இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளதால், உலகளாவி... மேலும் பார்க்க

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டக்காரர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்; இந்த `3' நாள்களுக்கு மழை!

'ஃபேனை 12 நம்பரில் வை டி மாலா' என்பது போல, தமிழ்நாட்டில் தற்போது வெயில் கொளுத்தி தள்ளுகிறது. இந்த நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் குட் நியூஸைப் பகிர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த வாரம் மழைக்கான வா... மேலும் பார்க்க