Vijay இதைச் செய்யலைன்னா, சவால்களை பட்டியலிடும் Journalist Shabbir Interview
"வொரி பண்ணாதப்பா, நல்லதே நடக்கும் என நீங்கள் என்னிடம் சொன்னப்போதே..!"- விஜய்க்கு ரவி மோகன் வாழ்த்து
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் பல முக்கியத் தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி த.வெ.க முன்னிலை வகிக்கிறது.

திரைப்பிரபலங்கள் பலரும் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரவிமோகன் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " விஜய் அண்ணா... அதிகாரம் கொடுக்கப்படலாம், ஆனால் மரியாதை என்பது சம்பாதிக்கப்படுவது, நீங்கள் இந்த இரண்டு விஷயங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இது வெறும் வெற்றி மட்டுமல்ல, நம்பிக்கையால் உருவான ஒரு புரட்சி. நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் அண்ணா.
சில நாட்களுக்கு முன்பு நாம் சந்தித்தப்போது “வொரி பண்ணாதப்பா, நல்லதே நடக்கும்” என்று நீங்கள் சொன்னப்போதே வெற்றி பெற்றுவிட்டீர்கள்.

முன்னேறிச் செல்லுங்கள் அண்ணா.. எதிர்காலம் ஏற்கனவே உங்கள் பக்கம் சாய்ந்துவிட்டது. உங்கள் மீது என்றும் எங்களுக்கு நிபந்தனையற்ற அன்பு உண்டு" என்று வாழ்த்தியிருக்கிறார்.






















