செய்திகள் :

பிரபாஸ் வீட்டு விருந்து, அல்லு அர்ஜுன் அனுப்பின பொக்கே - 'டார்லிங்' ரீ-ரிலீஸ் பகிரும் இயக்குநர்

post image

கோலிவுட் ரீரிலீஸ் கலாசாரம் இப்போது பக்கத்து மாநில படவுலகங்களில் கொடிகட்டிப்பறக்கிறது. டோலிவுட்டில் கடந்த 2010ல் வெளியான பிரபாஸின் 'டார்லிங்' படம், 16 வருடங்களுக்குப் பின் உலகெங்கும் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது.

ஒரே வாரத்தில் 12 கோடி வசூலைக் குவித்துள்ளது. 'பாகுபலி' ரீரிலீஸுக்கு அடுத்து பிரபாஸுக்குப் பெரிய வசூலைக் குவித்திருக்கிறது இது என்கிறார்கள். பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி நடித்த 'தொலி பிரேமா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.கருணாகரன்.

அதன் பிறகு அல்லு அர்ஜுனின் 'ஹேப்பி', பிரபாஸின் 'டார்லிங்', ராம்பொத்னேனியின் 'உல்லாசம்கா உத்சாஹம்கா' உள்பட பல படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் கருணாகரனிடம் 'டார்லிங்' படத்தின் ரிலீஸ் குறித்து கேட்டோம்.

போஸ்டரில்..
போஸ்டரில்..

``என்னோட சினிமா பயணத்தைத் தொடங்கி வச்சவர் பவன் கல்யாண் சார். முதல் படத்திலேயே தேசிய விருது கிடைச்சது. 'தொலி பிரேமா'வை இப்போதும் கொண்டாடுறாங்க. இந்த வரிசையில் வெளியான படம்தான் 'டார்லிங்'. பிரபாஸ் சார், காஜல் அகர்வால் நடிப்பில் 2010 வெளியான படமிது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் எவர்கிரீன் ரகம். 16 வருஷத்திற்குப் பிறகு வெளியானாலும் படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் ஜென்சி இளைஞர்களிடமே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ரீரிலிஸின் முதல் நாளிலேயே உலகெங்கும் வெளியாகி ஏழரை கோடிக்கு மேல் வசூல் ஆகியிருக்கு. ஒரு வார வசூல் 12 கோடி. ஹைதராபாத்தில் மட்டும் 75க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகியிருந்தது.

படப்பிடிப்பில்...
படப்பிடிப்பில்...

பிரபாஸுடன் வேலை செய்தது இனிமையான அனுபவம். படப்பிடிப்பின் போது வெளிநாடுக்குப் போயிருந்தோம். ரொம்ப அக்கறையா கவனிப்பார். அவரோட விருந்தோம்பல் ரொம்பவே ஸ்பெஷல். டைனிங் டேபிளில் விதவிதமாக 30- 40 வெரைட்டி இருக்கும்.

கருணாகரன்
கருணாகரன்

'இது நல்லா இருக்கும். அதை எடுத்துக்குங்க'னு அவர் அன்பும், அக்கறையுமாக கவனிச்சு சாப்பிட வச்சு அழகு பார்ப்பார். இத்தனைக்கும் அவர் எதையும் சாப்பிட மாட்டார். டயட்ல இருப்பார். அவரோட வீட்டுலேயும் விருந்து இப்படித்தான் இருக்கும். ரீரிலீஸ் ஆனதில் அவருக்கும் பெரிய சந்தோஷம். என்னை எப்பவும் 'செல்லம்'னுதான் கூப்பிடுவார். நானும் அவரை செல்லம்னுதான் சொல்லுவேன்.

இதைப் போலதான் அல்லு அர்ஜுன் சாரும், 'ஹேப்பி' படம் வெளியாகி 20வது வருஷ ஆனதுக்குச் சமீபத்தில் அவர்கிட்ட பெரிய பூங்கொத்து வந்திருந்தது. போன் செய்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துக்கிட்டார். சென்னையோடு எனக்கு நெருக்கம் அதிகம். சென்னையில் எனக்கு நணர்கள் நிறைய பேர் இருக்காங்க. இயக்குநர்கள் லிங்குசாமி, சசினு ஒரு பெரிய நட்பு வட்டமே இருக்காங்க. நான் சென்னை வரும் போது சந்திச்சு பேசுவேன்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

'டார்லிங்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷின் இசையும் பெரிய பலம். தியேட்டர்கள்ல இன்றைய ஜென் சி பசங்க செம உற்சாகமாக பாடல்களைப் பாடி, ரசிக்கறது பார்த்து சந்தோஷமா இருக்கு. அமெரிக்கா, லண்டனில் பல்வேறு நாட்டிலிருந்து ரசிகர்கள் வரவேற்பினை அனுப்பி வச்சிருந்தாங்க.

அதையெல்லாம் பிரபாஸுக்கும் காண்பிச்சேன். ரொம்பவே சந்தோஷப்பட்டார். 'டார்லிங்' இனிமையான நினைவுகளை மறுபடியும் மீட்டுக்கொடுத்திருக்கு'' என்கிறார் இயக்குநர் கருணாகரன்.

"வொரி பண்ணாதப்பா, நல்லதே நடக்கும் என நீங்கள் என்னிடம் சொன்னப்போதே..!"- விஜய்க்கு ரவி மோகன் வாழ்த்து

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவத... மேலும் பார்க்க

TVK: "புதிய முதல்வருக்கு எல்லா வளங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்" - விஜய் குறித்து விஜய் தேவரகொண்டா

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற... மேலும் பார்க்க

Vijay: "முதலில் சந்தேகித்தார்கள்; தற்போது மகுடம் சூட்டியிருக்கிறார்கள்"- தவெக விஜய்யை வாழ்த்திய நானி

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல முக்கியத் தொகுதி... மேலும் பார்க்க

சாய் பல்லவியா? ருக்மினி வசந்த்யா? எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் யார் நடிக்கலாம்? ஒரு அலசல்...

இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் (Biopic) சாய் பல்லவிக்குப் பதிலாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகி இணையத்தில் பேசுபொருளானது. கௌதம் தி... மேலும் பார்க்க

"முழுமையாக குணமடைய இன்னும்..." - பவன் கல்யாண் சிகிச்சை பற்றி சிரஞ்சீவி

ஆந்திராவின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை (18.04.2026) அவருக்கு அறுவை சி... மேலும் பார்க்க

"அதை முடித்துவிட்டு இரவில் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும்" - எம்பிபிஎஸ் பட்டம் பற்றி ஸ்ரீ லீலா

கோலிவுட், டோலிவுட் என இப்போது டிரெண்டிங்காக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீ லீலா. இவர் சமீபத்தில் அவருடைய எம்பிபிஎஸ் (MBBS) படிப்பை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றிருந்தார். ஶ்ரீலீலாதிரையில் நடனமாடுவதையும்... மேலும் பார்க்க