செய்திகள் :

"அசுரன் படம் பார்த்தீர்களா? கதை எங்கிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா?" - கலெக்டரின் சுவாரசிய உரை

post image

"மொபைலிலேயே அனைத்து புத்தகங்களும் வந்துவிட்டாலும், காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தை அந்த வாசனையை முர்ந்தபடி படிக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது" என்று கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் சுவாரசியமாகப் பல சம்பவங்களைத் தொட்டு பேசியது ஓசூர் புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்த வாசகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

ஓசூர் புத்தக திருவிழா
ஓசூர் புத்தக திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 15-வது ஓசூர் புத்தகத் திருவிழாவை கடந்த 24 ஆம் தேதி கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

அப்போது நடந்த விழாவில் பேசியவர், "தருமபுரி-சேலத்துக்கு இடையே தொப்பூர் கணவாய் பாதை உருவானதற்கு அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட தாது வருட பஞ்சம்தான் முக்கிய காரணம்.

சேலத்திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிக்குப் போக்குவரத்தை ஏற்படுத்த மலைகளுக்கு இடையே போக்குவரத்தை உண்டாக்க பஞ்சத்தில் இருந்தவர்களுக்கு உணவு அளித்து வேலை செய்ய வைத்தனர்.

இந்தத் தகவலை அப்போது சேலம் கலெக்டராக இருந்த ஹென்றி லே ஃபானு என்ற ஆங்கிலேயர் சேலம் டிஸ்ட்ரிக்ட் மேனுவல் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இப்படி நம் வரலாற்றைத் தெரிந்துகொள்ள புத்தகம் உதவுகிறது.

அதுபோல் தொ.பரமசிவன் எழுதிய அறியப்படாத தமிழகம், அழகர் கோயில் போன்றவை அருமையான புத்தகங்களாகும். தென் தமிழ்நாட்டில் ஒவ்வொரு சமூகத்திலும் இருந்த பண்பாட்டு விஷயங்களையும் அவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்து பதிவு செய்திருப்பார்.

அசுரன் படம் பார்த்தீர்களா? அந்தப் படத்தின் கதை சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலிருந்து எடுக்கப்பட்டது. சோ.தருமனின் சூல் நாவலில் நீர் நிலைகள் பற்றி பதிவு செய்திருப்பார். நான் பணியாற்றிய ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் மேலான்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க அந்தப் புத்தகத்தால் ஏற்பட்ட தாக்கமும் ஒரு காரணம்.

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

இங்கிருந்து அஞ்செட்டி வழியாக ஒகேனக்கலுக்குக் குறைந்த நேரத்தில் செல்லலாம் என்றாலும் அது வனத்துறை பகுதியாக இருந்ததால் புதிதாக சாலை அமைக்க முடியாமல் இருந்தது. அதனால் இங்கிருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாகத்தான் ஒகேனக்கல் செல்ல வேண்டியிருந்தது.

ஓசூரிலிருந்து அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் செல்ல ஒரு பாதையிருந்தது என்பதை 'சேலம் டிஸ்ட்ரிக்ட் மேனுவல்' என்ற புத்தகத்தில் படித்திருந்த அப்போது தருமபுரி கலெக்டராக இருந்த சித்திக், அந்த ஆதாரத்தை வனத்துறையிடம் காட்டி அனுமதி வாங்கி அஞ்சட்டி வழியாக ஒகேனக்கல் செல்லும் முக்கியமான சாலையை அமைத்தார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது புத்தக வாசிப்புதான்.

தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி போன்ற பகுதிகளில் புலி நடமாட்டம் அதிகமாக இருந்தபோது பெங்களூருவில் வசித்த கென்னட் ஆண்டர்சன் என்ற ஆங்கிலேய வேட்டையரைத்தான் அழைத்து வருவார்களாம். அவர் எழுதிய 'ஆம்னி பஸ் ஆப் கென்னட் ஆண்டர்சன்' என்ற நூலில் இப்பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி விலாவரியாகப் பதிவு செய்திருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உயர்ந்த சிகரமான குதிராயன் பீக் பகுதியிலுள்ள ஏரியில் உள்ள இரட்டை ஆலமரத்தைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறார். அந்த இரட்டை ஆலமரம் இப்போதும் உள்ளது. புத்தகத்தில் படித்த ஒரு சம்பவத்தை நேரில் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கலெக்டர் தினேஷ்குமார்
கலெக்டர் தினேஷ்குமார்

ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் மொபைலை, இன்ஸ்டாகிராம், ரீல்ஸைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகத்தை புத்தகஙகள் நமக்கு படம்போட்டு காட்டுகிறது. அதனால் புத்தக வாசிப்பை உங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் உங்கள் குழந்தைகளுக்கும் கடத்துங்கள்.

இணையத்தில் கிண்டில் என்ற ஒன்று வந்தபோது, இனி இங்குதான் புத்தகங்களை மக்கள் படிக்கப்போகிறார்கள், அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அவ்வளவுதான் என்றார்கள். இன்று கிண்டிலைத் தாண்டி மொபைலிலேயே அனைத்து புத்தகங்களும் வந்துவிட்டாலும், காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தை அந்த வாசனையை முர்ந்தபடி படிக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது.

அதனால் நீங்களும் தேடித்தேடி வாசியுங்கள், நீங்கள் வாசிக்க வாசிக்கதான் புதுப்புது எழுத்தாளர்கள் வருவார்கள். எழுத்தாளர்களை மறந்த சமுதாயம் வருங்காலத்தில் வரலாற்றைப் படைக்க இயலாத சமுதாயமாக மாறிவிடும். எழுத்தாளர்களை ஊக்குவித்தால்தான் புதுப்புது புத்தகங்கள் கிடைக்கும்.

வெற்றி பெற்றவர்கள் எழுதியதுதான் வரலாறு என்று ஒரு சொல்லாடல் உண்டு. ஆகச்சிறந்த வீரர்கள் ஒன்றிணைந்த தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் இருந்தார்கள். 12 கோட்டைகள் இப்பகுதியில் இருந்ததால் பாரா மகால் என்று அழைக்கப்பட்டது.

தமிழ்நட்டில் முதன் முதலில் பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ஒரு பேரரசின் தலைநகராக இல்லாததால் சங்கம் வளர்த்த மதுரைக்குக் கிடைத்த ஆவணப்படுத்தல் போன்ற பெருமை கிருஷ்ணகிரிக்குக் கிடைக்கவில்லை.

கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் என கிருஷ்ணகிரியின் வரலாற்றை ஆவணப்படுத்த இப்போது தொடங்கியிருக்கிறோம். அது குறித்த நூலும் வெளியிட்டுள்ளோம் விற்பனையில் தமிழகத்தில் நான்காம் இடத்திலிருக்கும் ஓசூர் புத்தக கண்காட்சியை முதலிடத்திற்குக் கொண்டு வருவோம்" என்றார்.

இன்று இப்படம் கடைசி!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பிரதிநிதித்துவத்தில் தோற்ற ஜனநாயகம் – 28 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லாதது ஏன்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'சில்லறை இருக்கா' முதல் 'QR Code இருக்கா' வரை! – டிஜிட்டல் புரட்சியும், 3 முக்கியக் கேள்விகளும்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திட்டம் அ: சைஃபரை பூஜ்ஜியமாக்கு! | உளவன் 11

உளவன் 11திட்டம் அ: சைஃபரை பூஜ்ஜியமாக்கு!கூசென்கோவை கொல்வது அவசியம். அவனை கொடூரமாகத் தண்டிக்க வேண்டும். அதுதான் மற்ற ஏஜெண்ட்களுக்கு பயத்தைத் தரும். இனிமேல் யாரும் சோவியத்தை ஏமாற்றத் துணியக் கூடாது. அதன... மேலும் பார்க்க

உலகத் தரம் என்றால் வேகம் மட்டும்தானா? - இந்திய ரயில்வேயின் முன்னிருக்கும் நிஜச் சவால்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அதிகாரம், தனிமை, மக்களின் அன்பு! – தலைவர்கள் நீண்ட காலம் நினைவில் இருப்பது ஏன்? அரசியலின் உளவியல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க