மணிப்பூரில் 2 மாவட்டங்களில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் மீட்பு
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், குடியிருந்த 250 பேரும் வெளியேற்றப்பட்டனர்.
மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, குடியிருப்பில் இருந்த சுமார் 250 பேரும் பாதுகாப்பாக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து ஒரு மணிநேரத்தில் தீயை அணைத்தனர்.
பின்னர், குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!