செய்திகள் :

'நிறைவான படம், திரையரங்குகள் நிறையட்டும்!' - 'சிறை' படத்துக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

post image

விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த 'சிறை' திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சிறை படத்தில்...
சிறை படத்தில்...

'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் 'சிறை' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும்.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது. தனது முதல் படத்திலேயே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்‌ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன் . இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும்" என்று பாராட்டியிருக்கிறார்.

Vijay: "சினிமா அவரை மிஸ் பண்ணும்"- ராஜபக்சே மகன் வாழ்த்து

விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரி... மேலும் பார்க்க

Jana Nayagan Audio Launch: 'ஆட்டோகாரரும் குடையும்!' - விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக... மேலும் பார்க்க

Jana Nayagan Audio Launch: "அடுத்த 33 வருஷத்துக்கு நன்றிக்கடனை தீர்த்துட்டுதான் போவேன்!" - விஜய்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக... மேலும் பார்க்க

JanaNayagan Audio Launch: "'ஜனநாயகன்' தளபதிக்கு எண்ட் கிடையாது, இதுதான் பிகினிங்!" - அ. வினோத்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக... மேலும் பார்க்க

JanaNayagan Audio Launch: "'ஜனநாயகன்' சம்பவமா இருக்கும்!" - மேடையில் இசையமைப்பாளர் அனிருத்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக... மேலும் பார்க்க

Jana Nayagan Audio Launch: "படுத்த படுக்கையாக இருந்த என் மகனை நடக்க வைத்தவர் நீங்கள்!" - நாசர்