அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி
அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி
சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, 'அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியிருக்கிறார். அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வலிமையான மற்றும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் இருந்த பாமகவை திட்டமிட்டு, சூழ்ச்சியால், அபகரிப்பதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கையால், ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் அடைந்தார்.
அன்புமணியின் தூண்டுதலால், சிலர் ராமதாஸின் மனம் புண்படும்படியாகப் பேசினர்.
தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது.

இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்திருக்கிறார்.
இதன் அடிப்படையில்தான், ராமதாஸ் பின்னே வலிமையான கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
அன்புமணி பின்னால் விவரம் அறியாமல் சென்ற நிர்வாகிகள் மீண்டும் திரும்பி வருவார்கள். ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். பாமகவுக்கு அன்புமணி வர வேண்டுமென அனைவரும் விரும்பினோம். சூழ்ச்சியால் பிரிந்து சென்றனர்" என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய பாமக எம்.எல். ஏ அருள், " ராமதாஸுடன் கூட்டணிக்காக
3 கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 3 கூட்டணிகளுமே அன்புமணியை நம்பத் தயாராக இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.















