பாரதிராஜா: ``உங்கள் மகனை உங்கள் மடியில் ஒப்படைத்துவிட்டோம்" - கவிஞர் வைரமுத்து உ...
அண்ணாமலையை நோக்கி நடிகர் ராகவா லாரன்ஸ்?
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது பொது வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து அறிவிப்பை ஒத்திவைத்திருந்த அவர் தனது அடுத்தக்கட்ட பயணம் குறித்த தகவலை இன்று காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இணைந்து பொது வாழ்க்கையில் தீவிரமாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் ரீதியாக அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தன்னை ரஜினியின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்ளும் லாரன்ஸின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் சமீபத்தில் அண்ணாமலையை சந்தித்து அவரது புதிய அரசியல் முயற்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படும் சூழலில் லாரன்ஸின் இன்றைய அறிவிப்பு அண்ணாமலையின் புதிய அரசியல் தளத்திற்கு மேலும் கவனம் ஈர்த்துள்ளது.
இதற்கிடையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் We The Leaders இயக்கத்தில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல், சினிமா மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் பலருடன் அண்ணாமலை தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.














