செய்திகள் :

`அதிமுகவில் நான் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை!’ - சி.வி.சண்முகம்

post image

த.வெ.க அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

அதையடுத்து மன்னிப்புக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, நம்பிக்கைத் தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொறுப்புகளை மீண்டும் வழங்கவில்லை.

அது எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

சி.வி.சண்முகம்

தலைமை நிலையச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த எஸ்.பி.வேலுமணியை துணைப் பொதுச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளர்களாக இருந்த தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவியும், அதேபோல் மற்றொரு மாவட்ட செயலாளரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குக் கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பும் கட்சியில் வழங்கப்பட்டது.

அதேசமயம் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் சி.வி.சண்முகத்திற்குத் தற்போது வரை பொறுப்புகள் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று திண்டிவனத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள், `நீங்கள் த.வெ.க-வுக்கு செல்ல இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறதே’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, ``நான் அதிமுகவில் இருக்கிறேனா என்று கேட்கிறீர்கள் அதானே….? நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. நீங்களே அதை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

`தவெக-வில் இணையச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்!'- கைதான அனிதா ராதாகிருஷ்ணன் `பகீர்' குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடந்த 20-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிர... மேலும் பார்க்க

Iran : அலி கமேனி இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் எங்கே இருந்தது? இஸ்லாமிய விதியை மீறி தாமதமானதா?

உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தற்போதுதான் தொடங்கியிருக்கின்றன. அ... மேலும் பார்க்க

`கடும் வேதனையளிக்கிறது; விசாரணையை நம்புகிறோம்!' - அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கையாடல் குறித்து RSS

அயோத்தி ராமர் கோயிலில் நடந்துள்ள நன்கொடை கையாடல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கும் இந்தக் கோயிலில் அரங்கேறியுள்ள இந்தச்... மேலும் பார்க்க

இனி பெட்ரோல், டீசல் விலை ஏறாது; எப்போது குறையும்? - மத்திய அமைச்சர் சொல்லும் 'ஹேப்பி நியூஸ்'

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன. இதை ஈடு செய்ய மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

`தவெக நிதியமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக வேண்டும்'- அடிதடி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பிய... மேலும் பார்க்க

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள்... மேலும் பார்க்க