செய்திகள் :

``அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும்" - அமைச்சர் நிர்மல் குமார்

post image

கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின் நினைவிடத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மேகமலை விவகாரத்தில் முந்தைய அரசு சரியான உண்மை நிலையை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கவில்லை. அங்கு வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் காடுகளின் அளவு குறித்த விவரங்களைச் சரியாகச் சமர்ப்பிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளது.

தற்போதுள்ள அரசு, உச்ச நீதிமன்றத்தில் அனைத்து உண்மை விவரங்களையும் எடுத்துக்கூறி, மக்களுக்குத் தேவையான விலக்குகள் மற்றும் நிவாரணங்களைப் பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வரும் வாரங்களில் இது தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் நல்ல செய்திகள் வெளிவரும். எங்களது அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே ஆகின்றன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையைப் போக்க விரிவான 58 கால்வாய் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

முந்தைய தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கிடையே நிலவிய தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் (ஈகோ) இத்திட்டம் முடங்கிப்போனது.

முன்னாள் அமைச்சர் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆதாரமின்றி யார் மீதும் பொய் வழக்கு போட முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தப்பிக்க முடியாது.

அ.தி.மு.க ஆட்சியில் மின்வாரியத்தில் (TANGEDCO) 45 டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் மக்கள் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் சட்டப்பூர்வமான வழக்குகள் தொடரப்படும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது மாநிலக் குழு மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துவது இயல்பானது. இக்கட்டான சூழல்களில் அவர்கள் இந்த அரசுக்கு ஆதரவாக நின்றுள்ளனர். சில சிறிய தவறுகளுக்கு அவர்களிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதற்கேற்ற சிறப்பான பதிலையும் அறிவிப்புகளையும் நாளை முதலமைச்சர் வழங்குவார்" என்றார்.

"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக..." - தவெக மீது உதயநிதி விமர்சனம்

சென்னையில் தவெகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை திமுக: "உன் மகனின் துரோகச் செயல்"- மோதிக்கொண்ட உதயம் சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் ( செப்டம்பர்- 5) நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில், மேடையேறி மைக்கைப் பிடுங்கிப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ.உதயம் சண்முகத்திற்கும் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கும் இடையே கார... மேலும் பார்க்க

`நெதன்யாகுவின் திருமணம் மீறிய உறவு?' - 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ருத் பார்

1993-ம் ஆண்டு இஸ்ரேல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியவர் அப்போதைய லிகூட் (Likud) கட்சியின் இளம் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு. தனது அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட பிளாக்மெயில் குற்றச்சாட... மேலும் பார்க்க

"எந்தத் தப்பும் செய்யவில்லை; நீதிமன்றம் மூலம் நிரபராதி என்று நிருபிப்போம்" - கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, "டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வ... மேலும் பார்க்க

`விகடனின் தனிச்சிறப்பே கார்ட்டூன்-தான்; ஒரு காலத்தில் என்ன நடந்ததென்பது..!' - ஜே.சி.டி.பிரபாகர்

Best Automobile Channel விருதை Motowagon சேனலின் ரெஜினுக்கு வழங்க மேடையேறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், ``தங்கள் நலனை காட்டிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்... மேலும் பார்க்க

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? - அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் ஜெ.முகமது பர்வேஸ்.இவர், கடந்த சில நாட்களாக தமிழக சட்ட... மேலும் பார்க்க