செய்திகள் :

"அதிமுக என் உயிருக்கும் மேலானது; ஆனால்..." - கட்சியிலிருந்து விலகிய MSM ஆன்ந்தன் சொல்வது என்ன?

post image

அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அக்கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்.

த.வெ.க- வில் இணையும் வாய்ப்பு அதிகம் என்கிற தகவல்கள் வெளியாகின்றன. தன்னுடைய விலகல் குறித்து தெரிவித்துள்ள அவர், "அம்மாவின் மறைவிற்குப் பிறகு மாவட்ட கழக செயலாளராக தலைமை அறிவுறுத்திய பணிகள் அனைத்தையும் செய்து வந்தேன்.

எம்.எஸ்.எம் ஆனந்தன்
எம்.எஸ்.எம் ஆனந்தன்

2020-ல் எந்தக் காரணமுமின்றி எனது மாவட்டச் செயலாளர் பொறுப்பு எடுக்கப்பட்டபோதும் தலைமைக்கு விசுவாசமாகப் பணியாற்றி வந்தேன்.‌ கண் முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது. அதனைத் தடுக்க தலைமையும் விரும்புவதில்லை. என்றுமே தலைமையின் மீது சந்தேகம் வராத வரையில்தான், ஒரு இயக்கத்தில் தொண்டன் சிறப்பாக இயங்க முடியும்.

ஆனால், இன்றோ தலைமையே இயக்கத்தைப் பார்க்காமல் தங்களை மட்டுமே காத்து கொள்வதில் அக்கறை காட்டுகிறது. எதிர்க்கருத்து சொல்பவர்களை எல்லாம் துரோகி பட்டம் சூட்டி வெளியே அனுப்ப தலைமையுடன் ஒரு சுயநலக் கூட்டம் இயங்கி கொண்டிருக்கின்றது.

நான் என்றும் அ.தி.மு.க-வை என்னுடைய உயிர்க்கும் மேலாக நேசிக்கின்றேன். ஆனால், தேனுடன் ஒரு துளி விஷத்தைச் சேர்த்தாலும் விஷம்தான் என்பது போன்று தலைமையின் விடாபடியான குணமும், சுயநல போக்கும் தொண்டர்களான தேனையும் விஷமாக்கிவிடும் என்பதுதான் நிதர்சன உண்மை.

தண்டனைகளைத்தான் நான் தருவேன் என்று தலைமை சொன்னால், யார்தான் கருணையையும், மன்னிப்பைத் தருவார்கள். தன்னை இகழ்ந்தவர்களையும், தாழ்த்தியவர்களையும் கூட அரவணைத்து ஏற்றத்தைத் தந்தவர் அம்மா.

எம்.எஸ்.எம். ஆனந்தன்
எம்.எஸ்.எம். ஆனந்தன்

இன்று அனைத்துக் கட்சிகளும் அ.தி.மு.க-வினரை அரவணைக்கத் தயாராக இருக்கும்போது அ.தி.மு.க-வின் தலைமை நீக்குவதில்தான் கவனம் செலுத்துகிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு அ.தி.மு.க எனும் மக்கள் தலைவர்கள் வளர்த்த இயக்கத்தில் இருந்து விடை பெறுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்து வந்த கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், என்னுடைய நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

அம்மா மறைந்தது முதலே தொடர்ந்து துரோகங்களையே நான் சந்தித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு துரோகி பட்டம் சூட்ட யாரும் முற்பட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க