"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்
அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்
சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இருக்கும்.

இன்னும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் தான் இருக்கிறது. திமுக அரசுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
திமுக மட்டும் நமக்கு எதிரி அல்ல. நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
துரோகிகள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள்.
அதிகாரம், ஆட்சி, பண பலத்தை மீறி அதிமுகவை நிலை நிறுத்தியுள்ளோம். அதிமுக அழிந்துவிடும் என்றார்கள்.
ஆனால் அதிமுகவை 4 ஆண்டுகள் சிறப்பாக நிலைநிறுத்தி காட்டியிருக்கிறார் எடப்பாடி அவர்கள். இதுதான் அதிமுகவின் சரித்திரம்.

யார் போனாலும் அதிமுக நிலைத்து நிற்கும். இது தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. இது கோபாலபுரம் குடும்பம் அல்ல.
நம்பிக்கையோடு இருங்கள். 2026-ல் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக நாம் எடப்பாடி பழனிசாமி அவர்களை அமர வைக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.














