செய்திகள் :

'அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்!'; மெலிந்த தோற்றத்தில் பென் ஸ்டோக்ஸ் - எதனால் இந்த மாற்றம்?

post image

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சமீபத்திய வீடியோ ஒன்றில் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Ben Stokes
Ben Stokes

இங்கிலாந்து அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

இந்தக் காணொளியில் பென் ஸ்டோக்ஸ் மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருந்தார்.

பென் ஸ்டோக்ஸின் தோற்றத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்திற்கு அவர் சமீபத்தில் மேற்கொண்ட முக அறுவை சிகிச்சை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நெட் பயிற்சியின்போது, பந்து பலமாகத் தாக்கியதில் முகத்தில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்.

Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்
Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்

இது குறித்து பிபிசி ஸ்போர்ட்ஸிடம் பேசிய பென் ஸ்டோக்ஸ், "பந்து நேராக எனது முகத்தில் வந்து தாக்கியது. இது மிகவும் பயமுறுத்திய ஒரு விஷயம்.

ஒரு சில இன்ச்கள் விலகி வேறு எங்காவது பந்து தாக்கியிருந்தால், இன்று நான் உங்களிடம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்திருப்பேனா என்பதே சந்தேகம்.

அந்த விபத்தில் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். கன்ன எலும்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது எல்லாம் சரியாகிவிட்டது," எனத் தெரிவித்திருக்கிறார்.

'மைதானத்துக்குள் வந்த ஆம்புலன்ஸ்; ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட லுங்கி இங்கிடி!' - என்ன நடந்தது?

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயல்கையில் லுங்கி இங்கிடி தவறி விழுந்து பலத்த அடிபட மைதானத்துக்குள்ளே... மேலும் பார்க்க

'வந்துருச்சு...வந்துருச்சு மாற்றம் வந்துருச்சு!' - லோனேஷ் லனகராஜின் கூற்றை உண்மையாக்கிய CSK!

சென்னை அணிக்கு நேற்றைய போட்டியை வென்று கொடுத்தது அகீல் ஹூசைனும் நூர் அகமதுவுமே. இருவருமே சரமாரியாக விக்கெட்டுகளை எடுத்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு வித்தியாசமாக செலிப்ரேட் செய்கிறார்கள். 'நீங்க ஏன் ம... மேலும் பார்க்க

MI vs CSK: 'இந்த வெற்றியை நான் அவருக்கே அர்ப்பணிக்கின்றேன்' - கேப்டன் ருதுராஜ் உருக்கம்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்23) சென்னை vs மும்பை அணிகளுக்கு இடையிலனா போட்டி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில... மேலும் பார்க்க

'அடேயப்பா... மிரட்டிட்டிங்களே!' - மாஸ் காட்டிய ராஜஸ்தான் பௌலர்கள்; வீழ்ந்த லக்னோ

டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல டி20-களுமே பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தும் பொழுதுகளில் அழகாகின்றன.பவர்பிளேல எந்தளவு ஒரு பௌலிங் படை சேதாரத்தை சந்திச்சுருக்குன்ற அடிப்படையில தான் டி20-ன் சுவாரஸ்யம் எப்போதும் அண... மேலும் பார்க்க

CSK: 'சோதனை மேல் சோதனை'; காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய ஆயுஷ் மாத்ரே!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் தோல்வியைச் சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த சீசன் முழுக்கவே நல்ல பெர்பாமென்ஸைச் சிஎஸ்கே-வின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே வெளிப்படுத்தியி... மேலும் பார்க்க

ஆப்கன் வீரருக்கு இந்தியக் குடியுரிமை? - BCCI சொன்ன விஷயம்; ரஷீத் கான் அதிர்ச்சித் தகவல்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷீத் கான் தனது சுயசரிதைப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத்... மேலும் பார்க்க