செய்திகள் :

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

post image

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, "நம் கண்முன்னாடியே ஒரு சொத்து வீணாகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நீர்வளம்தான்.

எத்தனையோ ஏரிகள், ஆறுகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. ஆனால் இயற்கை கொடுத்த வளத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். உலகத்திலேயே இருக்கக்கூடிய அதிசயங்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறது.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

உலகிலேயே தன்னூத்து (நிலத்திற்கு அடியில் சுரக்கக்கூடிய நீர்) இரண்டே இடங்களில்தாம் இருக்கிறதாம். ஒன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறது.

இன்னொன்று நம்முடைய ஊர் நெய்வேலியில் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அங்கு தன்னூத்து இல்லை. ஏனென்றால் லிக்னைட் கார்பொரேஷன் மூலமாக தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்டிருக்கிறது.

அதேபோல இன்னொரு அதிசயம் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்தியாவில் எந்த நகரத்திலும் சதுப்பு நிலம் கிடையாது. இந்தச் சதுப்பு நிலம் சரியாக இருந்தால் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரை இந்த நிலங்கள் உறிஞ்சிவிடும்.

மற்றொரு அதிசயம் கூவம். 72 கிலோ மீட்டர் இந்த ஆறு ஓடுகிறது. திருவள்ளூரில் உள்ள கூவம் என்ற ஊரில் இருந்து அது தொடங்குகிறது. அங்கு இந்தத் தண்ணீரை இன்றும் குடிக்கிறார்கள். கோயிலுக்கு அந்தத் தண்ணீரில்தான் அபிஷேகம் செய்கிறார்கள். விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

ஆனால் அந்தக் கூவம் எப்போது சென்னைக்கு வருகிறதோ ரசாயனக் கழிவு, நம்முடைய சாக்கடை கழிவு, திடக்கழிவு எல்லாம் கலந்து சாக்கடை மாதிரி மாறிவிட்டது. கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்துவோம் என்று அதற்காக நிதியை நீங்கள் (தவெக) ஒதுக்கி இருக்கிறீர்கள். அதை நீங்கள் தூய்மைப்படுத்தினால் மட்டும் போதாது. முதலில் கூவத்தில் கொட்டும் குப்பையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் 2வது கட்டம், நொய்யல் மற்றும் தாமிரபரணி நதிநீர் இணைப்புப் பணிகள், பாலாறு தடுப்பணை மற்றும் நந்தன் கால்வாய் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்..." - சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர் பால‌. நந்தகுமார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

`காக்ரோச், இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் `நோ' - தமிழக அரசின் சர்ச்சை உத்தரவும் உடனடி வாபஸும்

மாணவர்கள், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் கல்லூரிக் ... மேலும் பார்க்க

"கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால்.!" - முதல்வர் விஜய்யின் அறிவிப்பும் MLA-க்களின் பதில்களும்!

110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்துக்கள் ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் உட்பட 14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்; அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது தீவிரமான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற உதவியாளருமான விஜய் ஹன்சாரியா... மேலும் பார்க்க

'பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை; பால் கொள்முதல் விலை உயர்வு!' - முதல்வரின் அறிவிப்புகள்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் கொடுத்த அறிவிப்புகள்CM Vijayதொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.38 லிருந்து ரூ.41 ரூபாயாக கொள்முதல் விலை உயர்வு. வ... மேலும் பார்க்க

`அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்; ஆனால்.!'- அரசுக்கு பா.ரஞ்சித் கோரிக்கை

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க