செய்திகள் :

``அந்தப் பதவிக்காக நான் செய்த மிகப்பெரிய தியாகம்" - குடியரசுத் தலைவரின் வைரல் பாதுகாவலர் பேட்டி!

post image

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு உதவியாளராகப் (Aide-de-Camp - ADC) பணியாற்றியவர் முன்னாள் சிறப்புப் படை அதிகாரி மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவர் கனிவுடன் கவனித்துக்கொண்ட விதம் சமூக ஊடகங்களில் அவ்வபோது வைரலானது. இந்த நிலையில், அவர் சமீபத்தில் தன் பொறுப்பை ராஜினாமா செய்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியரசுத் தலைவரின் ஏடிசி-யாகச் செயல்பட்ட இவரின் பணி, அன்றாட வாழ்க்கை, கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அட்டவணைகளுக்கு உட்பட்டே நகர்ந்திருக்கிறது.

மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால்
மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால்

குடியரசுத் தலைவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், அவர்கள் நினைப்பதற்கு முன்பே செய்து முடிப்பதே இவரது பிரதான பொறுப்பாக இருந்துள்ளது. ஆனால், இந்த உயரிய மற்றும் கௌரவமிக்கப் பொறுப்பு, இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், தியாகத்தையும் கோரியுள்ளது. அது தொடர்பாக பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், ``குடியரசுத் தலைவரின் ஏடிசி-யாகப் பணியாற்றுபவர்கள் தங்களின் பதவிக் காலத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற விசேஷ விதிமுறை (Clause) அமலில் உள்ளது.

இதனால் எனது குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டியிருந்தது. ஒரு சாதாரண மனிதனைப் போல வெளியே சென்று வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போனது. 3 ஆண்டுகள் எனது சொந்த வாழ்க்கையை முழுமையாக ஒதுக்கி வைத்ததே, அந்தப் பதவிக்காக நான் செய்த மிகப்பெரிய தியாகமாக கருதுகிறேன். பல மாத யோசனைகளுக்குப் பிறகே, கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்யாமல், இராணுவப் பணியிலிருந்து விலகும் முடிவை எடுத்தேன்.

மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால் - திரௌபதி முர்மு
மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால் - திரௌபதி முர்மு

இந்த அனுபவம் குறித்து வருந்தவில்லை. கௌரவமிக்க ஒரு பொறுப்பிற்குச் செலுத்த வேண்டிய விலையாகவே இதைப் பார்க்கிறேன். இருப்பினும், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்புத் தலைவருடன் செலவிட்ட இந்த 3 ஆண்டுகள், எனக்கு ஒரு மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான அனுபவத்தை கொடுத்துள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடனான பிணைப்பு ஒரு தாயின் அரவணைப்பைத் தந்தது. 2014-ம் ஆண்டு முதல் இராணுவப் பணியின் காரணமாகத் தனது சொந்தத் தாயுடன் சேர்ந்து வாழ முடியாத சூழல் இருந்த நிலையில், குடியரசுத் தலைவருடன் தினமும் செலவிட்ட நேரம் அந்த ஏக்கத்தைப் போக்கியது. குடியரசுத் தலைவரின் எளிமையான மற்றும் அன்பான குணநலன், என்னைப் போன்ற அதிகாரிகளுக்குத் தாய் வீட்டின் உணர்வைத் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை." என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

`கழுத்தில் மாட்டிய டிராக்டர் டயர்' - அசௌகரியத்துடன் திரியும் காட்டு யானை; வனத்துறை நடவடிக்கை என்ன?

அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்தப் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று உலா வந்த காட்சி அ... மேலும் பார்க்க

ஈபிள் கோபுரம் சென்ற சாமியார்கள்: `சமத்துவத்தை விட்டுத்தர முடியாது' - பெண் ஊழியர்கள் போராட்டம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே 'BAPS' (போச்சசான்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பின் புதிய கோயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர... மேலும் பார்க்க

``எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்" - இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து நிறுவனம் அழைப்பு; பின்னணி என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி (21). இணைய உலகில் ‘பிட்டு தபாஹி’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், தனது பகுதியில் கடுமையாக மாசுபடுத்... மேலும் பார்க்க

Viral: சொறிந்துவிடும் வேலை; மாதம் 14 லட்சம் வருமானம்; சீன இளைஞரின் வித்தியாசமான தொழில்!

சீனாவின் ஹூபய் (Hubei) மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் சியாவோகியோ (Zhang Xiaoqiao - 32). இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஏழு வெவ்வேறு வேலைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்க... மேலும் பார்க்க

I’m Game: `அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடை' - கயாடு லோஹர் குறித்து துல்கர் சல்மான்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர... மேலும் பார்க்க

மகள்களின் கல்விக் கனவு: `ரூ.3000 பரிசுக்காக ஒரு தாயின் செருப்பில்லா மாரத்தான்' - நெகிழ்ச்சி வீடியோ

குழந்தைகளின் கல்விக்காக ஓடிய தாயின் தீவிரம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகாயைச் சேர்ந்தவர் ராமபாய் ரன்வீர் (47). கணவன்... மேலும் பார்க்க