அந்தியூரில் ரூ.10 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10 லட்சத்துக்கு நிலக்கடலை புதன்கிழமை விற்பனையானது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 132 மூட்டை நிலக்கடலையை (பச்சை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், நிலக்கடலை கிலோ ரூ.29.69 முதல் ரூ.39 வரையில் ரூ.2,13,068-க்கும், 343 மூட்டை நிலக்கடலை (காய்ந்தது) கிலோ ரூ.66.21 முதல் ரூ.75 வரையில் ரூ.7,87,067-க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.10,00,135 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.