செய்திகள் :

``கார்கே-ஜிக்கு வயதாகிவிட்டது... அவர் அமர்ந்தே கோஷமிடட்டும்" - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

post image

இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கியது பிரச்னை. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-க்கள் பிரதமர் மோடியைத் தாக்க திட்டமிட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

ஓம் பிர்லா
ஓம் பிர்லா

நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ``காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மக்களவையில் பிரதமரின் உரை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றினார். அதில், ``விக்சித் பாரத் பயணத்தில், கடந்த ஆண்டுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்குரிய ஆண்டுகளாக இருந்துள்ளன. இது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது.

நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது. 21-ம் நூற்றாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனால், கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாம் காலாண்டு எப்படித் தீர்க்கமானதாக இருந்ததோ, அதேபோல் இந்த இரண்டாம் காலாண்டும் தீர்க்கமானதாக அமையப் போகிறது. வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் திசையில், இந்த இரண்டாம் காலாண்டும் அதே அளவுக்குத் திறமையானதாக இருக்கப் போகிறது என்பதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்தியா பல நாடுகளுடன் எதிர்காலத்திற்கு ஏற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. கடந்த சில நாள்களில், உலகின் 9 பெரிய மற்றும் முக்கியமான நாடுகளுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம், இந்த ஒப்பந்தங்களிலேயே மிக முக்கியமான ஒன்றாகும். இன்று, இந்தியா பல நாடுகளின் நம்பகமான பங்காளியாகத் திகழ்கிறது. மேலும் உலகின் நலனுக்காக நாங்கள் எங்கள் பங்கை ஆற்றி வருகிறோம். இன்று, முழு உலகமும் 'குளோபல் சௌத்' (உலகளாவிய தெற்கு) பற்றிப் பேசுகிறது.

அந்த விவாதத்தின் முக்கியப் பாத்திரமாக, இன்று இந்தியா உலகளாவிய தளங்களில் 'குளோபல் சௌத்'-ன் ஒரு வலிமையான குரலாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது இல்லை. எனது தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியை அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள். எங்களின் ஆற்றலில் கணிசமான பகுதி கடந்தகாலத் தவறுகளைச் சரிசெய்வதிலேயே செலவிடப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில், உலகின் மனதில் உருவாக்கப்பட்ட பிம்பத்தை அழிப்பதற்கு மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது. அவர்கள் அந்த அளவுக்குச் சீரழிந்த நிலையில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதனால்தான் நாங்கள் எதிர்காலத்திற்குத் தயாரான கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். இன்று நாடு, கொள்கை மற்றும் உத்தியின் அடிப்படையில் ஆளப்படுகிறது. இந்தியாவின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது. ‘சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்’ என்ற மந்திரத்தால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் முன்னேறிச் சென்றுள்ளோம். இன்று தேசம் சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறிவிட்டது என்பதே யதார்த்தம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலை இருக்கிறது." என்றார்.

பிரதமர் உரையின் நடுவே காங்கிரஸ் கட்சியின் எம்.பி-கள் சீன ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பதிலளிக்கும்படி கோஷமிட்டனர். அப்போது பிரதமர் மோடி, ``கர்கே-ஜியின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாமல் இருப்பதற்காக, அவரை அமர்ந்தபடியே முழக்கமிட அனுமதிக்க வேண்டும் என்று தலைவர் அவர்களே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். எனவே, கார்கே-ஜி அமர்ந்தபடியே முழக்கமிட தயவுசெய்து அனுமதியுங்கள்." என சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இறுதிவரை, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தோ, நரவானே எழுதிய சம்பவம் குறித்தோ, எப்ஸ்டீன் கோப்பு குறித்தோ பிரதமர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'80 ஏக்கரில் திடல், 5 லட்சம் பேர் டார்கெட்; வேட்பாளர்கள் அறிமுகம்'- NTK மாநாடும் சீமானின் வியூகமும்!

ஆடு, மாடு, தண்ணீர், கடல் உள்ளிட்ட சூழலியல் மாநாடுகளை நடத்திய நாம் தமிழர் கட்சி, வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது. கட்சியின் தலைமை அலுவலகமான ராவண... மேலும் பார்க்க

கோவி.செழியன்: நிர்வாகிகளின் அதிருப்தி, உள்ளடியை சமாளிக்க வியூகம்! - திருவிடைமருதூரில் வாகை சூடுவாரா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான திருவிடைமருதூர் தனி தொகுதியில் திமுக-வைச் சேர்ந்த கோவி.செழியன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று தற்போது உயர் கல்வித்துறை அமைச்சராகவும் ... மேலும் பார்க்க

அவைக்கு வராத பிரதமர் மோடி: `எங்களிடம் எதைப்பார்த்து பயப்படுகிறீர்கள்?' - பிரியாங்கா காந்தி கேள்வி!

இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்க... மேலும் பார்க்க

`மோடியைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!' - ஓம் பிர்லா

இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறுத்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்... மேலும் பார்க்க