செய்திகள் :

`அந்த ஷோ பிக் அப் ஆகிடுச்சு; ஆனா நான் மாட்டிகிட்டேன்' - 'சமையல் சூப்பர் ஸ்டார்' மேடையில் சாய் சக்தி

post image

அவள் விகடன் நடத்திய 'சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3' நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. பிரபல செஃப் தீனா நடுவராக வந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி, தங்களது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டதுடன் சமையல் டிப்ஸ்களையும் வழங்கினர்.

முன்னதாக விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு என 12 இடங்களில் நடந்தது நினைவிருக்கலாம். அங்கு வெற்றி பெற்றவர்கள் இறுதிச் சுற்று நிகழ்ச்சிக்காகச் சென்னை வரவழைக்கப்பட்டிருந்தனர்.

மொத்தம் 38 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றில் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை போட்டி நடந்துகொண்டிருந்தபோது அரங்கத்திற்கு வருகை தந்திருந்த நடிகர் சாய் சக்தியிடம் பேசினோம்.

sai sakthi

''விஜய் டிவியில் 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சி ஒளிபரப்பான போது அதில் கலந்துகிட்டேன். அப்ப எனக்கு சமையல் சுத்தமா தெரியாது. நிகழ்ச்சிக்குக் கூப்பிடும் போதே சொல்லிட்டேன். ஆனாலும் டிவியில சமையல் நிகழ்ச்சின்னாலே இதுவரை சீரியஸாகவே காட்டிட்டு இருந்தாங்க. அதை மாத்தி ஜாலியான ஒரு சமையல் ஷோ மாதிரி பண்ணப் போறோம், அதனால நீங்க வாங்க'னு சொல்லிக் கூப்பிட்டாங்க.

அதனால நானும் போனேன். சேனல் விரும்பியபடி ஷோ பிக் அப் ஆகிடுச்சு. ஆனா நாந்தான் மாட்டிகிட்டேன். ஷூட்டிங்கின் போது தாமு சார் கிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன்.

'சமையல்னா என்னன்னே தெரியாம இங்க ஏன்யா வந்த'னு நேரடியாகவே கேட்டார். அவர்கிட்ட உண்மையை அப்படியே சொல்ல முடியுமா, அதனால திட்டு வாங்கினேன். ஆனா அந்த நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வர்றப்ப சமையல்ல ஓரளவு நம்பிக்கை வந்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்துட்டே கலைஞர் டிவியில சமையல் ஷோவுக்கு ஆங்கரா கூப்பிட்டாங்க.. பிறகு குக்கு வித் கோமாளிக்கும் கூப்பிட்டாங்க‌. இப்ப நான் நல்லாவே சமைப்பேன்'' என்றார் அவர்.

'எங்கு என்ன சாப்பிடலாம்' என தன்னுடைய சேனலில் ஃபுட் ரிவியூ செய்து கொண்டிருக்கும் நடிகர் பவித்ரனிடம் பேசிய போது,

``இந்த மாதிரியான சமையல் நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடாட்டிக் கூட போக விரும்புகிறவன் நான். ஏன்னா இந்த மாதிரியான இடங்களில்தான் புதுப்புது வெரைட்டியான டிஷ் கிடைக்கும். இப்ப இங்க கூட நாலு டிஷ் பத்தி நோட் பண்ணியிருக்கேன். வீட்டுக்குப் போனதும் முயற்சி செய்து பார்க்கணும்'' என்றார்.

'உணவே மருந்து' ங்கிற கான்செப்ட்டை தேர்ந்தெடுத்ததுக்காகவே விகடனைப் பாராட்டணும். ஏன்னா அவசர உலகத்துல நம்முடைய உணவுப் பழக்கம் மாறினதுடைய விளைவுகளை அனுபவிச்சிட்டு வர்றோம். 'உணவே மருந்து'தான் பழைய‌ ஆரோக்கியத்தை மீட்டெடுக்கறதுக்கான ஒரே வழி'' என்றார், நடிகரும் சின்னத்திரை நடிகர் சங்க செயலாளருமான நவீந்தர்.

'உங்க சமையல் எப்படி' என ஆன்ந்தியைக் கேட்டோம்.

''கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் தெரியாமதான் இருந்தேன். ஆனா இப்ப ஓ.கே ரகம். எந்த உணவுன்னாலும் அளவோடு எடுத்துகிட்டாலே போதும். தனியா டயட் அது இதுன்னு தேவையில்லை. தவிர அரிசியை குறைச்சுகிட்டு காய் கறி பழங்கள், கீரையை அதிகமா எடுக்கிறவ நான். டிப்ஸ்னு எங்கிட்ட‌ கேட்டா இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காம எல்லாருக்கும் சொல்வேன்'' என்கிறார்.

ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை - டிஎன்ஏ சோதனையில் உறுதி?

ந‌டிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்ததாகவும், அந்த பந்தத்தின் மூலம் தனக்குக் குழந்தை பிறந்ததும், சேர்ந்து வாழ மறுக்கிறார் எனவும் மகளிர் ஆணையம், நீதிமன்றம் என பல இ... மேலும் பார்க்க

`தம்பி மாதிரி பார்த்தேன்; இப்படி ஏமாத்துவான்னு நினைச்சுக்கூட பார்க்கலை!' - பிக்பாஸ் தாமரை செல்வி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரின் ஹீரோயின் ஸ்வேதாவுக்கும் அவர் கணவர் ஆதிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருக்கிற சூழலில், ஆதி மீது பண மோசடிப் புகார் ... மேலும் பார்க்க

டபுள் குக், பெண் நடுவர், மிஸ் ஆகாத தாமு, சின்ன பொண்ணு, மகாலிங்கம்.. குக்கு வித் கோமாளி சீசன் 7 ரெடி!

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக்கு வித் கோமாளி 7வது சீசனின் புரொமோ வந்து விட்டது.இந்தச் சீசன் தொடர்பாக கடந்த சில தினங்களாகச் சில தகவல்கள் கசிந்து வந்தன..அதாவது செஃப் தாமு இந்தச் சீசன... மேலும் பார்க்க

"ராஜசேகரனின் அதிகாரபூர்வ மனைவி நான். ஆனா திருமண பதிவு சான்றிதழ் நகல் தர இயலாதுனு சொல்றாங்க!" - தாரா

மறைந்த நடிகர் ராஜசேகரனின் மனைவி தாரா, தன்னுடைய திருமண பதிவு சான்றிதழின் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், நகல் தர இயலாது என பதில் தந்திருக்கிறது பதிவுத்துறை.ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜசேகரன் ... மேலும் பார்க்க

``'வீரா' சீரியலில் என் 'கண்மணி' கேரக்டரை முடித்து விட்டார்கள்!" - நடிகை சுபிக்ஷா

'வீரா' சீரியலில் இருந்து நடிகை சுபிக்ஷா வெளியேறி இருக்கிறார்.நடிகை வைஷ்ணவி அருள்மொழி, அருண், உள்ளீட்ட நடிகர் நடிகைகள் நடிக்க ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது... மேலும் பார்க்க