செய்திகள் :

`அனிதாவில் துவங்கிய நீட் மரணம் என் மகளோடு முடியணும்’ – தற்கொலை செய்த கோவை மாணவியின் தந்தை வேதனை!

post image

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த செந்தில் பிரபு என்பவர், கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரின் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தார். சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த அனுகீர்த்தனா, நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த ஆண்டு தீவிரமாகப் படித்துத் தேர்வும் எழுதி இருந்தார். ​மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக ஆவலோடு காத்திருந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அனுகீர்த்தனாவிற்கு கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.

அனு கீர்த்தனா
அனு கீர்த்தனா

‘மீண்டும் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெற முடியுமா?’ என்ற மன அழுத்தம் காரணமாக... இன்று அதிகாலையில் அனுகீர்த்தனா தனது சித்தப்பாவிற்கு  வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு, உடல்வலிக்கு பயன்படுத்தும் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு உறவினர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அனுகீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனு கீர்த்தனாவின்  குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவி அனு கீர்த்தனாவின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை உடலைப் பெறமாட்டோம் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் மற்றும் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிபிஎம் போராட்டம்
சிபிஎம் போராட்டம்

அப்போது பேசிய மாணவியின் தந்தை செந்தில் பிரபு, “அனிதாவில் துவங்கிய நீட் மரணங்கள் என் மகள் அனு கீர்த்தனா உடன் முடிய வேண்டும். மருத்துவக் கனவோடு இருக்கும் குழந்தைகளுக்கு நீட் தேர்வு மன உளைச்சலைத் தந்து வருகிறது. ஏராளமான குழந்தைகள் இறப்பிற்கு காரணமான இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தார். இது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனத்திடம் மாசப்படி பெற்ற வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான பினராயி விஜயன் மகள்!

கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் கருமணல் கம்பெனியான ​சி.எம்.ஆர்.எல் மற்றும் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலோஜிக் நிறுவனம் இடையேயான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்த... மேலும் பார்க்க

உ.பி: 'சமாஜ்வாதி கட்சி பிளவுபடுகிறதா?'- பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர்; அகிலேஷ் யாதவ் பதிலடி!

சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறிய நிலையில், இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருக்கிறார். உத்தரப் ப... மேலும் பார்க்க

"'sonஆதன' சிம்மாசனங்களுக்கு சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை!"- உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை 'சோஃபா மாடல்' அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வரும் நிலையில், தவெக அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெள... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் ‘குடும்ப ஆதிக்கம்’ குற்றச்சாட்டு - யார் அந்த மூவர்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குடும்ப உறுப்பினர்களின் பேச்சை மட்டுமே கேட்பதாகவும், தனது மகனை கட்சிக்குள் முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ... மேலும் பார்க்க

டெலிகிராம் தடை: ``திருடனைப் பிடிக்காமல் வீட்டைப் பூட்டுவதா?" - சாடும் ராகுல் காந்தி!

சமீபத்தில் நடந்த நீட்-யுஜி (NEET-UG 2026) தேர்வுகளின் வினாத் தாள் கசிந்த விவகாரமும், அதனால் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரமும் பெரும் விவாதமானது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு மறுத்தேர்வு ஜூன் 21-ம் தே... மேலும் பார்க்க

"தவெக அரசு இதை செய்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன்.!”- தங்கம் தென்னரசு சவால்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க