செய்திகள் :

உ.பி: 'சமாஜ்வாதி கட்சி பிளவுபடுகிறதா?'- பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர்; அகிலேஷ் யாதவ் பதிலடி!

post image

சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறிய நிலையில், இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளார்.

ஓம் பிரகாஷ் ராஜ்பர்
ஓம் பிரகாஷ் ராஜ்பர்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில், “சமாஜ்வாதி கட்சியில் விரைவில் ஒரு பெரிய பிளவு ஏற்படப் போகிறது. ராம் கோபால் யாதவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒரு கடிதத்தை அளித்துள்ளார்.

சுரங்க ஊழல் மற்றும் கோமதி நதிக்கரை மேம்பாட்டுத் திட்ட ஊழல் ஆகிவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். சட்ட நடவடிக்கைகள் இறுக்கமடைந்து வருவதால், சமாஜ்வாதி கட்சி பதற்றமடைந்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தை மறந்துவிடுங்கள். ஒட்டுமொத்த சமாஜ்வாதி கட்சியுமே பாஜக-வில் இணையத் தயாராக உள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், "விலைக்குப் போகத் தயாராக இருப்பவர்களை மட்டும்தான் மற்றவர்கள் வாங்குவார்கள். பயப்படுபவர்கள் மட்டும்தான் கட்சியை விட்டு ஓடுவார்கள். உண்மையில் பாஜக-வில் இருக்கும் பல தலைவர்கள்தான் இப்போது அங்கிருந்து வெளியேறி எங்கள் பக்கம் வரத் தயாராக இருக்கிறார்கள்.

சரியான நேரம் வரும்போது அவர்கள் தங்கள் வாயைத் திறப்பார்கள். இந்த நாடகம் எவ்வளவு காலத்துக்கு தொடரும்? துணிச்சலானவர்களால் மட்டுமே பாஜகவை எதிர்த்துப் போராட முடியும். சமாஜ்வாதி கட்சி மிகவும் பலமான கட்சி" என்று தெரிவித்திருக்கிறார்.

`அனிதாவில் துவங்கிய நீட் மரணம் என் மகளோடு முடியணும்’ – தற்கொலை செய்த கோவை மாணவியின் தந்தை வேதனை!

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த செந்தில் பிரபு என்பவர், கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரின் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள த... மேலும் பார்க்க

"'sonஆதன' சிம்மாசனங்களுக்கு சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை!"- உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை 'சோஃபா மாடல்' அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வரும் நிலையில், தவெக அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெள... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் ‘குடும்ப ஆதிக்கம்’ குற்றச்சாட்டு - யார் அந்த மூவர்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குடும்ப உறுப்பினர்களின் பேச்சை மட்டுமே கேட்பதாகவும், தனது மகனை கட்சிக்குள் முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ... மேலும் பார்க்க

டெலிகிராம் தடை: ``திருடனைப் பிடிக்காமல் வீட்டைப் பூட்டுவதா?" - சாடும் ராகுல் காந்தி!

சமீபத்தில் நடந்த நீட்-யுஜி (NEET-UG 2026) தேர்வுகளின் வினாத் தாள் கசிந்த விவகாரமும், அதனால் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரமும் பெரும் விவாதமானது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு மறுத்தேர்வு ஜூன் 21-ம் தே... மேலும் பார்க்க

"தவெக அரசு இதை செய்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன்.!”- தங்கம் தென்னரசு சவால்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் உடல்; கதறித் துடித்த பெற்றோர்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரஜேஷ்கண்ணன் - ஆனந்தி தம்பதியினரின் மகன் ஆகாஷ் டெலிசன் (26), குற்றவழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்குச் சென்றார்.அதையடுத்து ஆகாஷ் டெலிச... மேலும் பார்க்க